Tamilnadu

சவால்விட்டா பெரியாரிஸ்ட்களுக்கு ஆப்பு இந்து முன்னணி புகார் வேலை செய்தது பதிவாளர் அதிரடி உத்தரவு !

tnnews24
tnnews24

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்ச்சையான முறையில் நெல்லை பல்கலைக்கழகத்தில் ஈவேரா குறித்து கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது, இதில் பங்கேற்று கேள்வி எழுப்ப சென்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறை பல்கலைக்கழக வாசலில் தடுத்து நிறுத்தினர், இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் ஆளுநர் வரை இந்த விவகாரத்தை இந்து முன்னணி எடுத்து சென்றது. தற்போது அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.


திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லை பல்கலை கழகத்தில், இனி கருத்தரங்குகள் நடத்த முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என பல்கலை பதிவாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.பல்கலைக்கழகத்தில் மோதல் உண்டாகும் சூழல் உண்டானதை தொடர்ந்து இனி  பெரியார் கருத்தரங்குகள் நடத்த அனுமதியில்லை என துணைவேந்தர் பிச்சுமணி உத்தரவிட்டார்.

திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் சமூகவியல்துறை மற்றும் சமூகவிலக்கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வுமையத்தின் சார்பில் கடந்த 27 ல் ஈ.வெ.ரா.,குறித்த கருத்தரங்கு நடந்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்திரிகையாளருமான ரியாஸ்அகமது, பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் பேசினார்.இதில் பங்கேற்று கேள்விகள் கேட்க திட்டமிட்ட ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டவர்களை பல்கலைக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து அனுப்பினர்.

மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஈ.வெ.ரா.,குறித்த கருத்தரங்குகள் இன்னமும் 4 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவ.,8 ல் பெரியாரும் பெண்ணியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால் இனி இத்தகைய கருத்தரங்குகள் நடத்த அனுமதி கிடையாது என துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். இதனிடையே பல்கலை பதிவாளர் மருதகுட்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பல்கலை வளாகத்தில் துறைகள் சார்பில் இனி கருத்தரங்குகள், பயிற்சிபட்டறை போன்றவை நடத்துவதற்கு முன் அனுமதி நிச்சயம் பெறவேண்டும்.

நிகழ்ச்சி அழைப்பிதழின் மாதிரி, அதில் பங்கேற்பவர்களின்  பின்னணி விபரம், அது மாணவர்களுக்கானதா அல்லது யாருக்கான கருத்தரங்கம் போன்றவற்றை முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதிபெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார் , பெரியாரும் இஸ்லாமும் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த  பேராசிரியர் சாமுவேல் ஆசிர் கூறுகையில், இன்னமும் நான்கு நிகழ்வுகள் நடத்த திட்டமிட்டு இருந்தோம் ஆனால் எங்களை நடத்தவிடாமல் செய்வதற்காக இத்தகைய கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

படிப்பை கற்றுக்கொடுக்க வேண்டிய பல்கலைக்கழங்கங்கள் பலவற்றில் இஸ்லாமிய, பெரியாரிஸ்ட் ஆதரவாளர்கள் புகுந்து கொண்டு மாணவர்களை திசை திருப்ப பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இளம் வயதினர் மனதில் நஞ்சை விதைப்பதாகவும், இவர்கள் வளர்ந்து தேசத்திக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதால் நாங்கள் எதிர்த்துத்தோம் எனவும், இனியும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதை பல்கலைக்கழக நிர்வாகிகள் மாற்றி கொள்ளவேண்டும் எனவும் இந்து முன்னணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

எங்கள் நிகழ்ச்சியை உங்களால் எதுவும் செய்யமுடியாது என வீரப்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேசி வந்த பெரியாரிஸ்ட்களுக்கு ஒரே போராட்டம் மூலம் ஆப்பு அடித்துள்ளது இந்து முன்னணி அமைப்பு.  வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்