
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா போன்ற பல முன்னணி நடச்சத்திரங்கள் நடித்த படம் லியோ. லியோ படமானது அனைத்து திரையரங்குகளிலும் கடந்த 19ம் தேதி திரையிடப்பட்டது.ந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் முன் பதிவு இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி சில நேரத்திலேயே இருக்கைகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
இதற்கிடையில் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 18ம் தேதி இரவு வரை திரைப்படத்தின் முன்பதிவானது தொடங்கப்படாமல் இருந்தது.இதற்கு திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் எக்ஸ் வலைதளத்தில் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவுதாக பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து 18ம் தேதி ஆன்லனில் வெளியான டிக்கெட் ஒருசில நிமிடங்களில் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.இருப்பினும், படம் வெளியான 19ம் தேதி காலை முதல் திரையரங்கு வெளியே கூடுதல் விலைக்கு லியோ டிக்கெட்டை அதிகவிலைக்கு விற்றதும் தெரியவந்தது.
இந்த புகாரை தொடர்ந்து திரையரங்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். அப்போது திரையரங்கிற்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என நிர்வாகம் தெரிவித்தது.இந்த நிலையில் வெற்றி திரையரங்கின் மேலாளர் எழில் என்பவரே திரையரங்கிற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதற்காக புரோக்கர்களிடம் கட்டு கட்டாக டிக்கெட் வழங்குவது தெரியவந்தது. திரையரங்கு மேலாளரிடம் இருந்து டிக்கெட்களை பெற்று கொண்ட புரோக்கர்கள் அதிக விலைக்கு டிக்கேட்களை விற்பனை செய்யும் விடியோக்களும் வெளியானது.
நடிகர் விஜயின் ரசிகர்கள் எப்படியாவது படத்தை முதல் நாளே கான வேண்டும் என்றும் ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் சென்று காண வேண்டும் என்றும் ஆவலோடு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு திரையரங்க வாசலிலேயே ரூபாய் 2000 முதல் மூன்றாயிரம் வரை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்று கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. திரையரங்கு மேலாளரே லியோ பட டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த சம்பவம் மேலும் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் திரைப்பட டிக்கெடுகளை திரையரங்கு மேலாளரே அதிக விலைக்கு விற்க புரோக்கர்களிடம் கொடுத்து அவர்கள் விற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காணொளியை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு மனசாட்சி இல்லையா? படத்தை விடுமுறை நாட்களில் கொடுப்பதுடன் பார்க்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று பதிவு செய்து வருகின்றனர்.மேலும், இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்க்கும் தொடர்பு உள்ளதா? எனவும் கேள்வி எழுந்துள்ளது உரிமையாளர் அறியுறுத்தல்படியே கூடுதல் விலைக்கு வெளியில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.