sports

உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ச்சை திமுக பிரபலத்தை நவ நாகரீகமாக வெளுத்து எடுத்த பிரபல எழுத்தாளர்!

india vs pakistan
india vs pakistan

இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று(24/10/2021) துபாய் நாட்டில் நடைபெற்றது, இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது, வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவை வெற்றி பெற்றது எனவே பாகிஸ்தான் நாட்டினர் கொண்டாடி வருகின்றனர், இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த சில அரை வேக்காடுகளும் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்வதாக எண்ணி தங்கள் மதிப்பை குறைத்து கொண்டுள்ளனர்.


இந்த வகையில் சமீபத்தில் வேறு கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த ராஜிவ் காந்தி என்பவரை பிரபல எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் வெளுத்து எடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :-பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு காஷ்மீரில் வெடி வெடிப்பவன் மனநிலையும்,இந்த ட்விட்டை பதிவிட்ட திமுக ராஜிவ்காந்தியின் மனநிலையும் ஒரே நேர்க்கோட்டில்தான் உள்ளது.

ஆனால் உண்மையில் பல திமுககாரர்களின் மனநிலை இதுவல்ல என்பதற்கு கீழே அண்ணா படம் வைத்திருக்கும் ஒரு உடன் பிறப்பு போட்ட கமெண்ட்டே உதாரணம். ஆனால்,மோடி - பாஜகவை வெறுக்கும் பலருக்கு உண்மையில் எண்ணம் இந்தியா மீதிருக்கும் வெறுப்பு என்பதை புரிந்துகொள்வதில்தான் எதிர்கால அரசியல் உள்ளது.இந்த ராஜிவ்காந்தி நாம் தமிழரில் இருந்து திமுக வந்தவர், இதே மனநிலையில்தான் காலிஸ்தானிய சீக்கியர்கள் வெடி வைத்து கொண்டாடுகிறார்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு.

இந்தியா பலம் பெற வேண்டும்,இது ஒற்றை தேசமாக எழுந்து நிற்க வேண்டும்,இது வெல்ல வேண்டும்,இதன் கலாச்சாரம் உலகுக்கு உயர்த்தி சொல்லப்பட வேண்டும் என்று நினைப்பவர்களை பிற்போக்குவாதிகள்,சங்கிகள் என்று வரையறுப்பதை அளவுகோலாக வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய புல்லுருவிகள் என்பதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது.

திமுக என்றோ கைவிட்ட திராவிடஸ்தான் கோரிக்கைகளின் நச்சு விதைகள் இங்கே உருமாறி பலசித்தாந்தங்களின் வழியே வாழ்ந்து வருகிறது..அதை அடையாளப்படுத்தி வீழ்த்துவது ஒவ்வொரு இந்தியத் தமிழர்களின் கடமை என குறிப்பிட்டுள்ளார், ராஜிவ் காந்தி கருத்திற்கு சொந்த கட்சியிலேயே  எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, ராஜிவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இணைந்து ஊடகத்தில் பங்கேற்ற போது தனது பெற்றோர் வைத்த ராஜிவ் காந்தி என்ற பெயரையே மாற்றி தனக்கு புது பெயர் சூட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இந்தியாவின்  உப்பில் வாழ்ந்து கொண்டு பிறருக்கு விசுவாசம் காட்டும் பல நபர்களை அடையாளம் காட்டியுள்ளதாக சங்கர் வேந்தன் என்பவர் கருத்து தெரிவித்து உள்ளார்.