
தமிழக ஆளுநரும் உயிர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியும் ஒன்றாக உணவு சாப்பிடும் புகைப்படம்தான் தற்போது மீண்டும் அனலை கிளப்பி இருக்கிறது, சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறும் போது ஆக்ரோசமாக கையசைத்த பொன்முடி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தற்போது ஆளுநர் உடன் பொன்முடி ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
இந்த சூழலில் என்ன தான் நடந்தது என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ரவியும், உயர்கல்வி துறை அமைச்சர் என்ற முறையில் பொன்முடியும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சட்டமன்ற மோதலுக்கு பிறகு இருவரும் ஒரே மேடையில் இணைவது ஆச்சர்யத்தை உண்டாக்கிய நிலையில், அமைச்சர் பொன்முடி ஆளுநர் ரவியிடம் சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது உணர்ச்சியின் விழிம்பில் வந்தது என்றும் அதற்காக ஆளுநரிடம் நேரடியாக தனது வருத்தத்தை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநர் தரப்பில் மெல்லிய புன்னகை மட்டும் பதிலாக வந்தது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆளுநரை விமர்சனம் செய்வது பிறகு ஆளுநருடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவதுதான் திராவிட மாடலா? என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் ஆளுநர் மாளிகை போட்ட ட்விட்டர் பதிவு தமிழக ஊடகங்களை அதிர செய்துள்ளது ராஜ்பவன் தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில்,தமிழகத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது.நான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் என்னால் தமிழில் வரும் செய்திகளை யாருடைய துணையும் இல்லாமல் நேரடியாக படிக்க முடியும் என நேரடியாக பலருக்கு உணர்த்தியுள்ளார் ஆளுநர், ஏற்கனவே பல பத்திரிகைகளில் ஆளுநர் குறித்து தவறான செய்திகள் பகிர படுவதாக புகார் எழுந்த நிலையில் ஆளுநரே தமிழை படிக்க கற்று கொண்டு இருப்பது ஆளுநர் குறித்து தவறான தகவலை பரப்பினால் அவரே நடவடிக்கை எடுப்பார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 
                                             
                                             
                                            