24 special

சுதாரித்து கொண்டு பாஜக வைத்த செக்... எடப்பாடி கனவிற்கு விடியல்...!

Eps, annamalai, ops
Eps, annamalai, ops

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளில் இருந்தே அரசியல் களம் படு சூடுப்பிடிக்க தொடங்கி இருக்கிறது, காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூழலில் அதிமுக சார்பில் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தனி தனியாக வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த சூழலில் தான் அதிமுகதான் முதன்மை கட்சி அவர்கள் வேட்பாளரை நிறுத்தட்டும் அந்த பொது வேட்பாளர் திமுக கூட்டணியை வீழ்த்தும் வலிமை உடைய நபராக இருத்தல் வேண்டும் என அண்ணாமலை நேற்றைய முன்தினம் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இதற்கு இடையில் நேற்றைய தினம் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலை தெரிவித்த கருத்து, மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன இரண்டு நாட்கள் பொறுத்து இருங்கள் உங்கள் கேள்விக்கு நல்ல விடை கிடைக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த சூழலில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவிற்கு பாஜக வந்து இருக்கிறதாம் குறிப்பாக அதிமுகவின் இரண்டு தரப்பும் போட்டி வேட்பாளரை நிறுத்தினால் ஒரு வேலை சின்னம் கிடைக்காமல் போனால் பாஜகவின் தாமரை சின்னத்தில் பொது வேட்பாளரை நிறுத்த பாஜக தயாராகி வருகிறதாம்.

அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள GK வாசன் மற்றும் ஜெகன் மூர்த்தி தவிர்த்து மற்ற கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர், AC சண்முகம், தேவநாதன் யாதவ்,ஜான் பாண்டியன், ரவி பச்சமுத்து இன்னும் பலர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் மூலம் பாஜகவின் முடிவு முன்னேற்ற நிலையில் இருப்பதாகவும் டெல்லி தலைமை உத்தரவு போட்ட அடுத்த நிமிடத்தில் பாஜக போதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது, பாஜகவை தேர்தலில் போட்டியிட வைக்க கூடாது என கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரண்டு நாளில் மிக பெரிய பதிலடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதைதான் அண்ணாமலை நேற்றைய தினம் சூசகமாக இரண்டு நாட்கள் பொறுத்து இருந்து பாருங்கள் என குறிப்பிட்டார் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .