Tamilnadu

சபாஷ் இதுதான் தீர்ப்பு பானு கோம்ஸ் வரவேற்பு இனி தான் ஆட்டம் இருக்கு..!

Banugomes
Banugomes

சென்னை உயர்நீதிமன்றம் இந்து கோவில் நிலங்கள், கோவில்கள், அர்ச்சர்கள் சம்பளம், கோவில் பணம் ஆகியவை குறித்து முக்கிய தீர்ப்பு ஒன்றிணை வழங்கியுள்ளது, இந்த தீர்ப்பின் முக்கிய சாரம்சங்களை பகிர்ந்து பானு கோம்ஸ் ஒளி கீச்சு தெரிவதாக பானு கோம்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட வரைவு பின்வருமாறு :- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மஹாதேவன் & ஆதிகேசவலு ஆகியோர்  கொண்ட அமர்வு..புராதன சின்னங்கள் சார்ந்த வழக்கில் இந்து கோவில்கள் குறித்து நேற்று அளித்திருக்கும் தீர்ப்பின் சில அம்சங்கள் கீற்று போன்ற நம்பிக்கை ஒளியை பாய்ச்சுவதாக உள்ளது.

1. 100 ஆண்டுகளுக்கு மேலான கோவில்கள் அனைத்தையும் [ ஒரு சிலை மட்டுமே இருக்கும் சிறு கோவில்கள் உட்பட ] தொல்லியல் துறை ஆய்வு செய்து மதிப்பு வாய்ந்த புராதன  சின்னமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் தொல்லியல் துறையின் கீழ்  தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்து புராதன கோவில்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 75 வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படை அம்சமாக நான் பார்ப்பது இது தான் !

2. இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை யாருக்கும் கொடுக்கவோ விற்கவோ அரசு உட்பட யாருக்கும் உரிமையில்லை. அந்தந்த கோவில்கள் வசம் தான் இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும். ''கோவில் நிலங்களை பொறுத்தவரை பொதுநோக்கம் என்கிற அம்சத்தை  எடுத்து வரக் கூடாது.' (வெகு சிறப்பு. கோவில் நிலங்களை இனி பட்டா போட முடியாது)

3. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து  6 வாரங்களுக்குள் இணையதளத்தில் வெளியிடவேண்டும். அதன்மீதான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு  வாடகை/குத்தகை கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள்,  ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும்.

4. அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட இந்து கோவில் ஊழியர்கள் அனைவருக்குமான  ஊதியத்தை குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் படி நிர்ணயிக்க வேண்டும். ''அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும்.''இது மிக அவசியமான அடிப்படையான சீர்திருத்தம்.

5. இந்து கோவில்களின் நிதியை முதலில்' கோவில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை கலைஞர்கள் என ஊழியர்களுக்கு பயன்படுத்தவேண்டும். உபரி தொகை இருந்தால் மற்ற இந்து கோவில்களுக்கு பயன்படுத்தலாம்.

அதாவது இந்து கோவில்களின் வருமானம் அவற்றின் பராமரிப்பு மற்றும் அவை சார்ந்த செலவினங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். என தீர்ப்பு உணர்த்துகிறது என பானு கோம்ஸ் குறிப்பிட்டுள்ளார், பல கோவில் நிலங்களை அரசாங்கமே கையகப்படுத்தும் நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இனி தான் இந்து கோவில் நிலங்களை மீட்பது உள்ளிட்ட பல நிலுவையில் உள்ள வழக்குகளில் இந்த தீர்ப்பின் மூலம் ஆட்டமே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.