24 special

உத்திரபிரதேச அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

yogi adityanath
yogi adityanath

உத்திரபிரதேசம் : சட்டத்திற்கு புறம்பாக வழிபாட்டுத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றிய உத்திரபிரதேச அரசு மதரஸா பள்ளிகளில் வகுப்பு தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மானியமும் இல்லை என அறிவித்திருப்பது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.


உத்திரபிரதேச சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில் " தற்போது அரசு மானியம் பெரும் மதர்சாக்களுக்கு தொடர்ந்து வளர்க்கப்படும் ஆனால் இனி புதிதாக வரும் மதரஸாக்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது.புதிய பயனாளிகள் யாரும் பட்டியலில்  இணைக்கப்படமாட்டார்கள்.

தற்போது மாநிலத்தில் 560க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் அரசு மானியத்தை பெறுகின்றன. இது ஒரு பெரிய தொகை. மதரஸாக்களில் தரமான கல்வியை வழங்குவதிலேயே மாநில அரசு குறிக்கோளாய் இருக்கிறது. அதனால்தான் புதிதாக எந்த ஒரு மதர்ஸாவும் பட்டியலில் இணைக்கப்படமாட்டாது. இப்போதைய நிலை இதுதான்.

எதிர்காலத்தில் என்ன நடக்கு  என்பதை பிறகு பார்க்கலாம். உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 16,461 மதரஸாக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. அதில் 560 மதரஸாக்கள் அரசு மானியம் பெறுகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

யோகியின் இந்த முடிவை மாநில ஹஜ் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மொஹ்சின் ராசா வரவேற்றுள்ளார். மேலும் "முந்தய அரசுகள் பட்டியலில் சேர்த்து மானியனால் வழங்கின. ஆனால் தரமான கல்வியை தரமுடியவில்லை. தங்களுக்கு விருப்பமானவர்கள் பயன்பெறும் வகையிலேயே முந்தய அரசுகள் பட்டியலில் மஸ்தரஸாக்களில் சேர்த்தன.

ஆனால் அது மதரஸா கல்விக்கு எந்த ஒரு நன்மையையும் தரவில்லை. மாறாக அதை வைத்து அரசியலே செய்தார்கள்" என மொஹ்சின் தெரிவித்தார்.