24 special

திமுகவை விடவா பாஜகவில் ரவுடிகள் உள்ளனர்..? ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

Stalin,Annamalai
Stalin,Annamalai

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து அம்மாபேட்டை பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். சேலத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சேலத்தில் வைத்தே பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.


                                                                                            

முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக கட்சி குறித்து விமர்ன்சம் செய்திருந்தார். அதவாது, பாஜக கட்சியில் அண்ணாமலை ரவுடிகளை சேர்த்திருப்பதாக பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அவர்கள் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் கூறுகிறார் பாஜகவுக்கு ரவுடிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று அவரிடம் கணக்கு இருக்கிறதாம். ஆனால், திமுகவில் பிரியாணி கடையில் பாத்திரம் திருடறவன், கடையில் பெண்களை தாக்குறவன் போதை பொருள் மாநிலமாக தமிழகத்தை மாற்றிய ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே திமுகவில் 2000 ரவுடிகள் இருக்கிறான். அதுல 200 ரவுடிகள் மனம் திருந்தி பாஜகவில் இணைந்துள்ளார்கள் என்று பாஜகவினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

                                                                                    

இந்நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேட்பாளருக்கு தினம் தோறும் அவர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், நேற்று சேலம் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் சமூக நீதி பற்றி பேசி, அதனை கடைப்பிடிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றி வருபவர் மு.க.ஸ்டாலின். 35 அமைச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள், ஏன் மற்றவர்கள் யாரும் இல்லை. இவர்கள்தான் சமூக நீதி ஆட்சியை நடத்துகிறார்களா?பாஜக சமூக நீதியுடன் செயல்பட்டு வருகிறது.

                                                                                              

இந்தியாவின் முதல் குடிமகனாக உள்ள திரௌபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவரை நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கி சமூக நீதியை நிலை நாட்டிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. அண்ணன் வீரபாண்டி ஆறுமுகத்தைவிடவா நான் ரவுடிகளை சேர்த்திட்டேன். திமுகவும் ரெளடிசமும் பின்னிப் பிணைந்தது, காவல்துறையை வாடா போடா என்று பேசுகிற கட்சிதான் திமுக, கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காக உள்ளே இருந்த காந்தி இப்போது அமைச்சராக இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 15 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளது.

                                                                                         

ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார். இனொருவர் சிறைக்கு போக தயாராக உள்ளார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுக குறித்த விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். அண்ணாமலைக்கு கோவையிலும் மக்கள் ஆதரவு அளிக்க தயாராகின்றனர். கோவையில் அண்ணாமலைக்கான வெற்றி வாய்ப்பு என்பது அதிகப்படியாக உள்ளது, அங்கு திமுக மற்றும் அதிமுக பின் தங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.