
இந்திய தேர்தல் ஆணையம் S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, கடந்த 4-ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட கால காலை இடைவெளியில் நடத்தப்படும், வழக்கமான கணக்கெடுப்பு தான் இது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போதும் S.I.R. நடந்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கியவுடன் அப்பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச குடியாளர்கள் பெருமளவில் தங்கள் நாட்டுக்குத் திரும்பும் நிலை உருவாகி உள்ளது. நாடு முழுவதும் ஒருவரே பல இடங்களில் ஓட்டு போடுவதைத் தடுக்கவும்,இறந்த வாக்காளர்களை நீக்கவும் உண்மையான மற்றும் தகுதியான வாக்காளர்கள் யார் என்பதை சரியாக அடையாளம் காணவும் மத்திய அரசு எஸ்ஐஆர் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது. பீஹாரில் தொடங்கிய இந்த பணி, தற்போது தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்களிலும், கோவா மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அசாமிலும் எஸ்ஐஆர் தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் கோல்கத்தாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த நபர்கள் தற்போது வங்கதேசத்திற்கு திரும்பி வருகிறார்கள். வங்கதேசத்துக்கு சென்றவர்களை செய்தியாளர் நேரடியாகப் பேட்டி எடுத்துள்ளார். அந்த உரையாடலில் அவர்கள் வெளிப்படையாக கூறியது:
*“நாங்கள் வங்கதேசத்தில் இருந்து கோல்கத்தாவுக்கு சட்ட விரோதமாக வந்தோம். எங்களிடம் பாஸ்போர்ட் இல்லை, ஆவணங்கள் ஏதும் இல்லை. புரோக்கர் மூலம் 5,000–7,000 ரூபாய் கொடுத்து எல்லை தாண்டினோம். இரண்டு ஆண்டுகளாக இங்கே இருந்தோம். ஆனால் இப்போது எஸ்ஐஆர் தொடங்கிவிட்டதால், எங்களால் இங்கே தங்க முடியாது.
எந்த சட்ட ஆவணமும் இல்லை. அதனால் சொந்த நாட்டுக்கே திரும்புகிறோம்.”இங்கே உள்ள அரசு எங்களுக்கு வெளியேற உதவி செய்கிறது. எல்லையைத் திறந்து பாதுகாப்பாக செல்ல வழி கொடுத்துள்ளது. கைவசம் உள்ள இந்திய பணத்தை செலவழித்துவிட்டு தான் திரும்ப வேண்டும். வேறு வழி இல்லை இந்த முழு உரையாடலும் வீடியோவாக வெளியிடப்பட்டதால், மேற்கு வங்கத்தில் நடந்துவரும் தீவிர கணக்கெடுப்பின் நேரடி விளைவுகள் பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.
சட்டவிரோத குடியேற்றத்தாரைப் பற்றி பேசினால் “அனுதாபம் வேண்டும்”, “மனித நேயம் வேண்டும்”, “அவர்களும் மனிதர்கள்தான்” என்று பேசியவர்கள் யார் என்பதை இந்த எஸ்ஐஆர் பணி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. .ஏனென்றால் ‘‘மனித நேயம்’’ என பேசிய அரசியல் கட்சிகள் அவர்களை மத ரீதியில் பயன்படுத்தி ஓட்டுகளை பெற்று வந்துளார்கள் பெற்றார்கள் என்பது தான் உண்மை.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த தீவிர கணக்கெடுப்பு, பல ஆண்டுகளாக பேசப்பட்ட போலி வாக்காளர் பிரச்சினை எல்லை ஊடுருவல், ஆவணமில்லா குடியேற்றம் போன்றவர்களை விரட்ட தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் பணிகள் நாடு முழுவதும் முழு தீவிரத்தில் தொடங்கும்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும். குறிப்பாக தென் மாநிலங்களில் கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மிக பெரும் உண்மைகளை வெளி கொண்டு வரும் இந்த SIR
