24 special

பாக்கிற்கு விழுந்த அதே மிதி வங்கதேசத்திற்கு! வெட வெடத்து போன வங்கதேசம்! அடுத்தடுத்து இரு சம்பவம்

PMMODI,SHEHBAZSHARIF
PMMODI,SHEHBAZSHARIF

சமீபத்தில் வங்கதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக, அவர்களில் இறை தூதர் என்று போற்றப்படும் நபி அவர்களை அவதூறாக பேசி, வெறுப்பு கருத்துக்கள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் ஒருவரை முஸ்லீம் கும்பல் ஒன்று அடித்தே கொன்று, சாலையில் தீயிட்டு எரித்தனர். இந்த வழக்கில், கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் மத வெறுப்பை பரப்பியதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் இந்தியா வங்கதேசம்  இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமானது அதிகரித்து காணப்படுகிறது.  இந்தியாவின்  மையப்பகுதிக்கும் வடகிழக்கு  இந்தியாவுக்கும் நடுவே அமைந்திருக்கக்கூடிய நாடுதான் பங்களாதேஷ். பங்களாதேஷ் அப்படின்னு சொல்லி ஒரு நாடு உருவானதற்கு காரணமே நம்ம இந்தியாதான். 

இதற்கிடையே,,  வங்கதேச தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ஹஸ்னாத் அப்துல்லா தான் இந்தியாவை  சீண்டி உள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஷாஹீத் மினார் பொதுக்கூட்த்தில் ஹஸ்னாத் அப்துல்லா பேசியதாவது:‛‛இந்தியாவின் எதிரிகளுக்குத் தங்கள் நாட்டில் புகலிடம் அளிப்போம்.இந்தியாவை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகள் மற்றும் இந்திய எதிர்ப்பு கொண்ட சக்திகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து தங்கவைப்போம். இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை'இந்தியாவில் இருந்து பிரிப்போம்'' என்று வாய்ச்சவடால் விட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வங்கதேசம்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய ஷெரீஃப் உஸ்மான் ஹாதி   பெரு வங்கதேசம் என்ற வரைபடத்தை வெளியிட்டான் அவன் வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவின் 7 மாநிலங்கள் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது  என்பது போல் இருந்தது. இது இந்தியாவில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. 

இதற்கிடையில் வங்கதேசத்தில்  அடுத்த வருடம் வர போகும் தேர்தலில் போட்டியிடும் மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாதி  டாக்காவில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி,  டிசம்பர் 18ஆம் தேதி மரணமடைந்தான்.

இதையடுத்து, வங்கதேசத்தின் பல்வேறு இடங்களில் மாணவ இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதில், இந்து இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி சாலையில் தீயிட்டு எரித்து கொடூரமாக கொன்றது. இந்த நிலையில், இன்னொரு மாணவர் தலைவர் சுடப்பட்டுள்ளார். 

மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர்,  சுடப்பட்டுள்ளார், இந்த துப்பாக்கி சூடு  மீண்டும் வங்கதேசத்தில் போராட்டங்களைத் தூண்டியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது.முகமது மொடலெப் சிக்தரம் இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வந்தது குறிப்பிடதக்கது. இதே நிலை நீடித்தால் வங்க தேசம் மொத்தமாக  சீரழிந்து சின்னாபின்னமாகும் எனவும் இன்னொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் எனவும் உலகநாடுகள் எச்சரித்துள்ளது. இந்தியா அதன் எல்லைகளில் இராணுவத்தை குவித்துள்ளது.