திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அதிக சர்ச்சைகளை கண்டு வருகிறது. அதன்படி மக்களிடையே திமுக ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது என்ற செய்திகள் வெளிவந்த காரணத்தினால் முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையை மாற்றம் செய்தார். முன்னதாக அமைச்சர் நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருந்த பொழுது பல்வேறு குற்றச்சாட்டுகள் பால்வளத் துறையில் மீது சுமத்த பட்டது, குறிப்பாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு மிகவும் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. அதன் பிறகு நாசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார் ஆனாலும் பால் தட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தில் பல புகார்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அம்பத்தூரில் பால் பண்ணையில் இருந்து வழக்கமாக காலை 4 மணிக்கு பால் வர வேண்டியது ஆனால் எட்டு மணியை கடந்தும் பால் வராமல் இருந்துள்ளது இதனால் அண்ணா நகர் அமைந்தகரை உள்ளிட்ட பல இடங்களில் ஆவின் பாலின் தட்டுப்பாடு காணப்பட்டது. பாலை உற்பத்தி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஆவின் பாலை விநியோகம் செய்யும் 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆவின் பாலை விநியோகம் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆவின் பாலை விநியோகம் செய்யும் வண்டிகளில் இரண்டு வாகனங்களின் எண்கள் ஒரே எண்களாக உள்ளது என்றும் புகார் அளிக்கபட்டது.. மேலும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் 30க்கும் மேற்பட்ட சிறார்கள் வேலைக்கு அமர்த்தபட்டதாகவும் மேலும் அவர்கள் ஐஸ்கிரீம் பேக்கிங் பிரிவில் பணியாற்றிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு பணியில் அமர்த்தப்பட்ட சிறார்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதியத்தை வழங்காமல் இருந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் ஆவின் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இப்படி அடுக்கடுக்கான தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் மத்தியில் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது முற்றிலும் சித்தரிக்கப்பட்ட செய்தி என்று கூறினார்.
இந்த விவகாரம் பற்றி எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று ஒரு செய்தியாளர் அமைச்சர் மனோ தங்கராஜிடம் கூறிய பொழுது சற்று தடுமாறி அவர் பதில் அளித்ததும் சர்ச்சைக்குள்ளானது, அதாவது மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி எந்த ஒரு சிறார்களும் எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்தக் கூடாது என்பது சட்டம் ஆனால் 14 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே சிறார்கள், 14 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வளர் பருவத்தினர் அதனால் அவர்களை பணியில் அமர்த்தலாம் ஆனால் ஹசாடர்ஷ் எனப்படும் மிகுந்த அபாயகர பணிகளில் அமர்த்த கூடாது என்பதே சட்டம் அதன்படியே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறிய பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஆரம்பத்தில் பணியமர்த்தப்படவில்லை என்றீர்கள் தற்போது ஆதாரம் உள்ளது என்று கூறியதும் மாற்றி பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பிறகு ஆணித்தனமாக சிறார்கள் ஆவின் பாலகத்தில் பணியமர்த்தப்படவில்லை இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் சென்று மகிழ்ச்சியாக பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
அமைச்சரின் பேச்சுக்கிணங்கியே ஒரு பிரபல நியூஸ் சேனலை சேர்ந்த செய்தியாளர் அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் வளாகத்தில் உள்ளே சென்று பார்வையிட வேண்டும் என்று கூறியதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி மறுத்துள்ளனர் இந்த விடியோவும் வெளியாகி பால்வளத்துறை அமைச்சரை ஆட்டம் காண வைத்துள்ளது. மேலும் வேலூரில் ஒரே பதிவு எண்கள் கொண்ட இரண்டு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி நடவடிக்கை எடுக்க உள்ளீர்களா என்ற செய்தியாளர் கேட்ட பொழுது வேண்டுமென்றால் காவல்துறையிடம் இது பற்றி புகார் அளித்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அமைச்சர் நாசர் இருக்கும் போது தான் பல்வேறு புகார்கள் எழுந்தது அமைச்சரை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அமைச்சரையும் மாற்றியது திமுக ஆனாலும் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது, கூடுதலாக தற்போது சிறார்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் வெளியாகி, அதைப் பற்றி கேள்வி எழுப்பும் பொழுது செய்தியாளர்கள் மத்தியில் கடும் கோபத்துடன் பதில் அளித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்கனவே திமுகவின் அமைச்சரவையில் மற்றுமொரு மாற்றம் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகின்ற நிலையில், இப்படியே ஆவின் நிர்வாக சீர்கேடு தொடர்ந்தால் அந்த அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் பெயரும் கண்டிப்பாக இடம்பெறும் என்றே தகவல்கள் கிடைத்துள்ளன. "இப்பொழுதான் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளேன் அதற்குள் அமைச்சர் பதவி பறிக்கப்போகிறார்கள்" என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் புலம்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.