24 special

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய செந்தில்பாலாஜி...! வைரலான வீடியோ

Senthil balaji,tasmac
Senthil balaji,tasmac

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் செய்த முறைகேடுகள் போதாது என்று தற்போது உள்ள ஆட்சி பொறுப்பிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு நிகழ்த்தியுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் மத்தியில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. மேலும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுதலிருந்தே டாஸ்மார்க்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையில் சில இடையூறுகள் நிகழ்ந்ததாக டாஸ்மார்க் பணியாளர்கள் குற்றம் சாடியுள்ளனர். 


அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த பொறுப்பில் அமைச்சராக பதவி ஏற்றதிலிருந்து டாஸ்மார்க் ஊழியர்கள் அவ்வப்போது மிரட்டலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தால் தொழிற்சங்கங்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது அதைப்பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது இந்த குற்றச்சாட்டை மறுத்து எங்கே அப்படி நிகழ்கிறது காட்டுங்கள் என்று கோபமடைந்ததால் மது பிரியர்கள் டாஸ்மார்க் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுவதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கினர் இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒரு கும்பல் டாஸ்மார்க் ஊழியர்களை மிரட்டி ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்க வேண்டும் அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை எங்களிடம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர் என இந்த குற்றச்சாட்டை டாஸ்மார்க் ஊழியர்களே கூறியுள்ளனர். கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒரு கும்பல் பாட்டிலுக்கு அதிக ரூபாய் வைத்து விற்பனை செய்ய சொல்லி அந்த பணத்தை பிடுங்கி வருகின்றனர் என்று குற்றம் சாடி டாஸ்மார்க் ஊழியர்கள் மேலிடத்தின் மேல் கோபத்தில் இருந்து வந்தனர்.

அதாவது நாங்கள் மாஸ்டர் டிகிரி படித்தவர்கள் நாங்கள் இப்படி  எங்களது பிழைப்பிற்காக டாஸ்மாக்கில் வேலை பார்த்து வருகிறோம். எங்கோ இருந்து விட்டு தற்போது ஒரு கும்பல் வந்து எங்களை மிரட்டுகிறது, இது குறித்து நாங்கள் புகார் அளித்தால் கண்டு கொள்ளவதும் இல்லை, ஆனால் எங்களை டார்கெட் வைத்து விற்க சொல்லி தொந்தரவு செய்து வருகிறார்கள் என்று கொந்தளித்த டாஸ்மார்க் ஊழியர்கள் சத்தம் இல்லாமல் முடிவு எடுத்து டாஸ்மார்க் கடைகளில் அமைச்சர்கள் தான் அதிக பணத்திற்கு மதுபானங்களை விற்க சொல்கின்றார்கள் கரூர் கேங்க் தான் மிரட்டிகின்றனர் என வீடியோ பதிவிட்டு அதனை வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த கருத்துக்கள் அடங்கிய பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது, மேலும் அந்த வீடியோவில் ஏன் 130 ரூபாய்க்கு 140 ரூபாய் வாங்குகிறீர்கள் என்று ஒருவர் கேள்வி கேட்டதற்கு அதிகாரிகள் அனைவருக்கும் லஞ்சம் கொடுக்கிறோம் அதனால் பத்து ரூபாய் சேர்த்து தான் மதுபானங்களை விற்க முடிகிறது அப்படியே விற்கவும் சொல்கிறார்கள் என்று டாஸ்மார்க் ஊழியர் கூறிய வீடியோ தற்போது செந்தில் பாலாஜிக்கு மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. 

ஏற்கனவே வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கண்காணித்து வருகிறது, முன்னதாக எட்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டது,  இப்படிப்பட்ட சூழ்நிலையில் டாஸ்மார்க் ஊழியர்களின் இந்த வீடியோக்கள் அதிக அளவில் உலா வருவது செந்தில் பாலாஜிக்கு ஆபத்தாகவே முடியும் என்றே தெரிகிறது

மேலும் இது சம்பந்தப்பட்ட வீடியோக்களை எடுக்க நபர்கள் வந்தாலும் எடுங்கள் எடுங்கள் நீங்களாவது எடுத்து நெட்டில் போட்டு விடுங்கள் அப்படியாவது பரவட்டும் என டாஸ்மார்க் ஊழியர்கள் கூறி வீடியோக்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அரசியல் விமர்சகர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து தூக்கினால் தான் டாஸ்மாக் துறைகளில் ஊழியர்கள் பணியற்றுவார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.