24 special

ஜி.ஆர்.சுவாமிநாதனுக்காக ஒன்றிணைந்த நீதிபதிகள்... மொத்தமாக மாறிய நிலவரம்..... இப்போ புரிகிறதா பவர்...வெளியான முக்கிய தகவல்.

G.R.SWAMINATHAN,MKSTALIN
G.R.SWAMINATHAN,MKSTALIN

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட  இண்டி கூட்டணி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். நாடளுமன்றத்தில் 538 எம்.பிக்கள் இருக்கும் நிலையில் வெறும் 100 எம்பிக்கள் மட்டுமே  ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என  மனு கொடுத்துள்ளார்கள். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டம் வழி வகை செய்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இது வரை எந்த ஒரு நீதிபதியும்நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.1993ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது, ஆனால் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான போதிய பெரும்பான்மை இல்லாததால் தோற்றுப்போனது. இது போல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 


திமுக திருப்பரங்குன்றம் விஷயத்தை வைத்து அமைச்சர் நேரு மீதான 1000 கோடி  ஊழல் மழை வெள்ளம் பாதிப்பு, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் என அனைத்தையும் மூடி மறைக்கவும், தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிறுபான்மை ஓட்டிற்காகவும்  திருப்பரங்குன்றம்  விஷயத்தை பெரிதாக்கி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். சரி காங்கிரஸ் எதற்கு இதில் துதி பாடவேண்டும் என்றால் கேரளா தேர்தல், கேரளாவில் 27 சதவீத சிறுபான்மை ஓட்டுகள் இஸ்லாமியர் ஓட்டுகள் உள்ளது. அந்த மாநிலத்துக்கும் அடுத்த வருடம் தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அது மட்டுமில்லாமல்  இந்தியாவிற்கு ரஷியா அதிபர் வந்து சென்றது, உலக முன்னணி நிறுவனங்கள் முதலீடு, அமெரிக்காவிடம் அடிபணியாதது என இந்தியாவும் மோடியின் பிம்பமும் உலக அளவில் உயர்ந்து வருகிறது. இதை மக்களிடத்திலிருந்து மடைமாற்றவும் திருப்பரங்குன்றம் விஷயம் பெரிது படுத்தப்பட்டுள்ளது மிகவும் சென்சட்டிவான விஷயம் என்பதனால் இதை ஊதி பெரிதாகக்கி உள்ளார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.  

இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக்கோரி ம் தீர்மான நோட்டீசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளின் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். பதவிநீக்கம் கோரிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களின் செயல் நீதிபதிகளை மிரட்டும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற மிரட்டல்கள் ஜனநாயகத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.முன்னாள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சிவஞானம் உள்பட 56 பேர் கூட்டாக கையெழுத்திட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்துக்கு, இண்டி கூட்டணி நோட்டீஸ் கொடுத்தது மிகவும் கண்டனத்துக்குரியது. இது, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிர்பார்ப்பு களுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் அப்பட்டமான முயற்சி.அவர்கள் மனுவில் பதவி நீக்கம் போன்ற நடவடிக்கையை எடுப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லை

 மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, கடந்த 1975ல், நாட் டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அப்போது, கோட்பாடுகளுக்கு இணங்க மறுத்த நீதிபதிகளை தண்டிக்க, பதவி உயர்வை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசியல் தலையீடால் நீதித் துறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.சில அரசியல் நலன்களுக்கு சாதகமற்ற முடிவுகளை எடுக்கும் போது, நீதிபதிகளை அவமதிக்கும் செயல்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன.முன்னாள் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் உள்ளிட்டோர் அதற்கு உதாரணம்.