24 special

கேரள ஆளுநர் போட்ட போடு ஓட்டம் எடுத்த எதிர்க்கட்சிகள்!

Stalin,  pranav vijayan
Stalin, pranav vijayan

நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் அரங்கேரி வருகின்றன, ஒரு பக்கம் ஆளுநர்கள் மீது எதிர்க்கட்சிகள் புகார் மீது புகராக தெரிவித்த வண்ணம் இருக்க இப்போது கேரள ஆளுநர் போட்ட போடில் வாயடைத்து போயிருக்கிறார்கள் தமிழகத்தை ஆளும் திமுகவும் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா மாநில முதல்வரும்.


கேரளா முதல்வர் பிணராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானிற்கும் இடையே கைகலப்பு மட்டுமே நடைபெறவில்லை அந்த அளவு இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் தன்னை பற்றி முழுமையாக தெரியாது என முதல்வர் பின்றாயி விஜயன் தெரிவிக்க அதற்கு இளம் போலீஸ் அதிகாரி துப்பாக்கியை எடுத்ததும் ஓடிய ஆள் தானே நீங்கள் என ஒரே போடாக போட்ட கேரள ஆளுநர் அதோடு நிற்காமல்..,

தைரியம் இருந்தால் ராஜ்பவனுக்குள் நுழையுங்கள்,என்னைத் தாக்குங்கள் சும்மா பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் வேண்டாம் என்றவர் .

என்னை யாரென்று தெரியாதென தொடையை தட்டுகிறார் பிணராயி..பல வருடங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் காவல் நிலையத்தில் சிக்கியவனை மீட்கப்போகிறேன் என வந்து,அப்போது ஒரு இளம் அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டியதில்,அடுத்த 15 நிமிடத்தில் வீட்டிற்கு போய் வேட்டியை மாற்றும் நிலைக்கு வந்தவரை எனக்கு நன்றாகத் தெரியும் என கேரள ஆளுநர் பேசியது கேரள முதல்வர் பிணராயி விஜயனை மட்டுமல்ல ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பல்கலைக்கழங்ககளில் ஆளுநர் அதிகாரத்தை நீக்க மசோதா நிறைவேற்ற போவதாக பிணராயி விஜயன் தரப்பு கூறினாலும் அவற்றை எல்லாம் தாண்டி தும்சம் செய்து கொண்டு இருக்கிறார் கேரள ஆளுநர், இந்த நிலையில் ஆளுநர் அதிகாரத்தை எல்லாம் முதல்வரால் ஒன்றும் செய்ய முடியாது என சட்டம் தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.

கேரள ஆளுநர் கொடுத்த பேட்டியை பார்த்த தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒரு விதத்தில் சந்தோச பட்டு இருக்கிறதாம் கேரள ஆளுநர் முதல்வர் பிணராயி விஜயன் வேட்டியை மாற்றிய வரலாறை எல்லாம் பேசுகிறார் வா ராஜ் பவனுக்கு பார்க்கலாம் என்கிறார் நல்ல வேலை தமிழக ஆளுநர் ரவி எங்கேயும் அந்த அளவில் பேசவில்லை என ஒரு வித மகிழ்ச்சியில் இருக்குறார்களாம்.

கேரள ஆளுநர் அடித்த அடியில் தமிழக ஆளுநர் எவ்வளவோ மேல் எனும் முடிவிற்கு திமுக தரப்பு வந்து இருப்பதாகவும் கேரளாவில் அடித்தால் அது தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநில எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்கள் இடையேயும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.

ஆமாம் கேரள ஆளுநர் முதல்வர் பிணராயி விஜயனை பார்த்து இளம் போலீஸ் அதிகாரியை பார்த்து வேட்டியை மாற்றியவர்தான் என கூறியது என்ன காரணம் யார் அந்த அதிகாரி என பலரும் இப்போது கூகுல் செய்து வருகிறார்கள்.

இது ஒரு புறம் என்றால் தமிழக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என கடிதம் மூலம் டெல்லிக்கு சென்று குடியரசு தலைவருக்கு அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்த திமுகவை எதிர்த்து தமிழக ஆளுநரும் பேச தொடங்கினால் என்ன நடக்கும் என அதிர்ச்சியில் இருக்கிறார்களாம் உடன் பிறப்புகள்.