
தற்போது உள்ள சூழலில் இந்தியாவில் இருந்து கொடு இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்கள் மத ரீதியாக பேசுபவர்கள் யார் யார் என்று அடையாளம் கண்டு வருகிறார்கள். மேலும் போலியாக ஆதார் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களை மத்திய அரசு களையெடுக்க தொடங்கி உள்ளது, ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவ தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவில் வருமானத்தை பார்த்து கொண்டு எதிரி நாடுகளுடன் கைகோர்த்து நாசா வேளைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்தியாவில் போலியாக உள்ள வெளிநாட்டினரை துரத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது மத்திய அரசு.
இதற்கிடையில் இந்தியாவில் ‘ஆதார்’ என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்துக்காக வழங்கப்பட்ட அடையாள எண் ஆகும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய ஆதாரில் உள்ள விவரங்களை வைத்து பல வகையான நிதி மோசடிகளும் அரங்கேறுகின்றன. இத்தகைய மோசடிகளை தவிர்ப்பதற்காக பல்வேறு புதுப்பிப்புகளை ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அடையாள மோசடியை தடுக்கவும், நலத்திட்டங்களுக்காக ஆதார் எண்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்தவும் மற்றும் தகவல்களை துல்லியமாக வைத்திருக்கவும் ஆதார் ஆணையம் இந்தியா முழுவதும் இறந்த நபர்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை நீக்கி உள்ளது.இறந்த நபர்களை அடையாளம் காண இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பொது வினியோக அமைப்பு மற்றும் தேசிய சமூக உதவி திட்டம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்து இதுதொடர்பான புள்ளி விவரங்கள் பெறப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட ஆதார் எண்கள் வேறு யாருக்கும் மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. ஒருவர் இறந்தவுடன், அது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களின் ஆதார் எண்ணை நீக்குவது அவசியம் என்று ஆதார் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆதார் ஆணையம் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம் தொடர்பாக புகார் அளித்தல் என்ற புதிய அம்சத்தை ‘மை ஆதார்’ என்ற இணையதளத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த சேவை தற்போது 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைக்க பணி நடந்து வருகிறது.
மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த நாடு திரும்பத் துவங்கியுள்ளனர்.எஸ்.ஐ.ஆர்., பணி துவங்கிய நாள் முதலே, ஏராளமானோர் எல்லை தாண்டி வங்கதேசம் செல்ல துவங்கியுள்ளனர். நாள்தோறும் 150 - 200 பேர் வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பல்லாயிரகணக்கான வங்கதேசத்தினர், முறைகேடாக வாக்காளர் அடையாள அட்டை பெற்று இங்கு நடந்த தேர்தல்களில் பல முறை வாக்களித்துள்ளனர் என்ற தகவல், ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.இவர்கள் யாருக்கு ஓட்டளிப்பார்கள் எனபது அனைவருக்கும் தெரிந்ததே,
சில மாதங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேசத்தைச்சேர்ந்த ஷாயின் என்கிற ஷகீன், இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். திருப்பூரில் குடியேறி, கரைப்புதுாரில் வீடு கட்டி வசிப்பது தெரியவந்து கைது செய்யப்பட்டார். அதே போன்று, சிட்கோவில் குடும்பத்துடன் தங்கியிருந்த வங்கதேச நபரை போலீசார் கைது செய்தனர்., மனைவி, குழந்தையுடன், 10 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வேலை செய்வது தெரிந்து பிடிபட்டார்.,மேலும் தன்வீர் அஹமது உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். இவர்களில் தன்வீர் அஹமது மீது டாக்காவில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. ஏஜென்ட் வாயிலாக, 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அசாம் வழியாக நுழைந்து திருப்பூரில் குடியேறியது தெரிந்தது.இவர்களை களையெடுக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
