
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவு பாஜகவுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாராகி வருகிறது எதிர்வரும் 2026 தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். பீகார் முடிவுகள் நம்பிக்கையில், விரைவில் நடைபெறவுள்ள கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளனர். பீகாரில் சிறுபான்மை சமுதாய மக்கள் வாக்கு பாஜக பெருமளவில் கிடைத்திருப்பதால், பாஜக புதிய திட்டங்களுடன் களமிறங்கவுள்ளது.
கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற ஆர். ஸ்ரீலேகாவை திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறக்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை காட்ட கேரள கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கேரளாவில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக கால் பதித்தது. திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் உற்சாகம் அடைந்த பாஜக சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் கட்சியை வீழ்த்த முனைப்பு காட்டி வருகிறது.
இந்த சூழலிதான் அங்கு உள்ளாட்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரஸ் - பாஜக போட்டா போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தான் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற ஆர்.ஸ்ரீலேகாவை பாஜக, திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் களம் இறக்கியுள்ளது.தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் பாளையத்தில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2010ல் வெறும் ஆறு இடங்களை மட்டுமே வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் 35 இடங்களைப் வென்று வலுவாக கால் பதித்தது. திருவனந்தபுரம் மாநகராட்சியை எப்படியவாது கைப்பற்ற வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டும் நிலையில், பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மாநரகாட்சி தேர்தலை நேரடியாக கண்கானித்து வருகிறது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் மாநகரட்சிக்குட்பட்ட தொகுதிகளில் மூன்றை கைப்பற்றிவிட வேண்டும் என்ற பிளானுடன் பாஜக இந்த வியூகம் வகுத்து வருகிறது.
கேரளத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமைக்குரிய ஆர். ஸ்ரீலேகா தனது 33 ஆண்டுகாலப் பணிக்காலத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். ஆலப்புழா, பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவிலும், மாநில போக்குவரத்து ஆணையராகவும் அவர் சேவையாற்றியுள்ளார். மேலும், குற்றப்பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி போன்ற உயர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.கேரளாவில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஸ்ரீலேகா தலைமை தாங்கியுள்ளார்.
இதற்கிடையில் கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் மொத்தம் 21,065 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 19,871 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.மொத்தம் 75,632 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பாஜகவே அதிக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
