India

இந்திய இராணுவத்தின் பெரும் கனவு மிக பெரும் கனவு நினைவாகிறது.. போடு!

India and France Army
India and France Army

இந்தியா மற்றும் ப்ரான்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தம் குறித்தும் இந்திய இராணுவத்தின் தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டான்லி ராஜன் அது பின்வருமாறு :- இந்தியா ராணுவம் இப்பொழுதெல்லாம் உலக கவனம் பெற்றுவிட்டது மிக வேகமாக உருமாறியும் வருகின்றது, மோடியின் ஆட்சியில் அது மிகபெரிய சாதனை ஒன்றை செய்து அடுத்தடுத்த முன்னேற்றங்களில் வேகமாய் கால்வைக்கின்றது, கடந்த 50 வருடங்களில் சீனாவினை கட்டுபடுத்திய இரண்டாம் நாடு இந்தியா அதாவது சோவியத் யூனியன் உடைந்தபின் சீனாவினை தடுத்து நிறுத்திய முதல் பலமான நாடு இந்தியா என உலகம் சொல்ல தொடங்கிவிட்டது.


உண்மையில் அது ஆச்சரியம், சுமார் 2 லட்சம் வீரர்களை அனுப்பினால் லடாக்கினை கைபற்றலாம் இந்தியா அணிசேரா நாடு இன்னும் நம்மை எதிர்க்கும் அளவுக்கு பலமில்லை என சீனா கருதி எடுத்துவைத்த அடியில் அடிகொடுத்து சுமார் 1.5 ஆண்டாக எல்லையில் சீனாவினை தடுத்து கொண்டிருக்கின்றது இந்தியா, இந்த துணிச்சலை கண்டு உலகநாடுகள் ஏகபட்ட தொழில்நுட்பங்களை கொடுக்கின்றன‌.

இந்தியா முழுக்க ரஷ்ய பிடியில் இருந்த நாடு, சாஸ்திரி அதை மீறமுயன்றபொழுது கொல்லபட்டார். இந்தியாவில் தொழிற்சங்கம், கட்சிகள் இன்னும் பல இடங்களில் ஊடுருவியிருந்த ரஷ்ய செல்வாக்கு இந்தியாவுக்கு அந்த கடிவாளமிட்டது, 100 சதவீதம் ரஷ்யாவினை நம்பி இருந்தது இந்தியா, இது ஒருவித குழப்பத்தை இந்தியாவுக்கு கொடுத்தது அதாவது சீனாவிலும் முழுக்க ரஷ்ய ஆயுதம் இருக்கும்பொழுது நாமும் அதையே பாவிப்பது அவ்வளவு நல்லதல்ல எனும் முடிவுக்கு இந்தியா வந்தது.

அதாவது மோடி அரசு வந்தது, இதனால் நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் அணிசேருதல் என மோடி களமிறங்கினார், மெல்ல மெல்ல ரஷ்ய இறக்குமதி குறைந்தது பிரான்ஸ் அமெரிக்கா இஸ்ரேல் என இந்திய கரங்கள் நீண்டன‌, அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து வாங்க வேண்டியதை வாங்கியது இந்தியா இப்படி வாங்கி கொண்டே இராமல் சொந்த தயாரிப்பு அப்படியே தயாரித்ததை விற்பது, அந்நிய நாட்டின் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிப்பது என இந்தியா அதிரடிகளை காட்டிற்று, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானம் ஓரளவு தயாராகிவிட்டது, இது இந்தியாவின் சொந்த தயாரிப்பு ஒரு விமானம் 2 ஆயிரம் கோடி என வாங்கும் வெட்டி செலவினை இந்த தயாரிப்பு இனி குறைக்கும்.

இதில் இந்தியா இப்பொழுது மிக வலுவாகிவிட்டது, அடுத்து கடற்படை பக்கம் காட்சிகள் வருகின்றன‌, இந்திய கப்பல்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி அவசியம். இந்தியாவிடம் அப்படி ஒன்று உண்டு ஆனால் அது ரஷ்யாவுடையது குத்தகை அடிப்படையில் மிகபெரிய பணம் பெற்றுகொண்டு நமக்கு அதை ரஷ்யா தந்தது இனி திருப்பியும் எடுப்பார்கள் கடற்போரில் அணுசக்தி நீர்மூழ்கி அவசியமானவை, ஆண்டுகணக்கில் கடலடியே அவற்றால் இயங்கிகொண்டே இருக்கும் வலிமைவாய்ந்தவை அவை, அந்த நீர்மூழ்கிகளை பிரான்ஸ் இந்தியாவுக்கு வழங்க முன்வந்திருக்கின்றது, சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் இப்பொழுது மூன்று உண்டு அதில் இரண்டு அணியில் இந்தியா இருக்கின்றது.

இந்தியா வந்த பிரான்ஸ் அமைச்சர் பார்லி இதுபற்றி ஒப்பந்தம் செய்துள்ளார் இனி பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் அணுசக்தி நீர்மூழ்கி கட்டபடும், இது இந்திய கடற்படையின் மிகபெரும் கனவு அந்த கனவினை மோடி அரசு நிறைவேற்றி கொடுக்கின்றது, பல்லாண்டு கால இந்திய வரலாற்றில் தேசத்துக்கும் ராணுவத்துகும் மிகபெரிய திருப்புமுனையினை மோடி அரசு கொடுத்து கொண்டிருக்கின்றது. இந்தியா மிகபெரும் வல்லரசாக இன்னும் இந்த ஆட்சி அடுத்த 10 ஆண்டுகள் அதி அவசியம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.