24 special

இந்திய விமானப்படையின் சாதுர்யம்..! போட்டிபோடும் போயிங் நிறுவனம்..!

Indian airforce
Indian airforce

புதுதில்லி : இந்திய விமானப்படைக்கென ஆறு A 330 ரக மல்டி ரோல் டேங்கர் டிரான்ஸ்போர்ட்டுகளை வழங்க இந்திய விமானப்படை டெண்டர் விட்டிருந்தது. இரண்டுமுறை IAF ஆல் விடப்பட்ட டெண்டரை ஏர்பஸ் நிறுவனமே கைப்பற்றியிருந்தது. ஆனால் நிதியமைச்சகம் அந்த தொகை அதிகம் என கூறி டெண்டரை ரத்து செய்தது.


இந்நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் இஸ்ரேல் ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை ஒன்றிணைந்து போயிங் 767 ரக விமானங்களை MMTT ( மல்டி ரோல் டேங்கர் டிரான்ஸ்போர்ட்) ஆக மாற்றும் முயற்சியில் கைகோர்த்துள்ளன. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களும் 767க்கான ஏர் பிரேம்களை குறைந்த செலவிலும் அதற்க்கு பொருத்தமான வகையிலும் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளில் இந்திய விமானப்படையும் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் முதல் ஆறுவிமானங்களுக்கான இறுதிக்கட்டமைப்பை விமானப்படையே உறுதி செய்யும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போயின் 767 விமானம் என்பது நடுத்தர அளவிலானதும் அகலமான ட்வின் ஜெட் விமானமுமாகும். 

இதன்விலை தோராயமாக 90 மில்லியன் டாலருக்கும் குறைவு என கூறப்படுகிறது. மற்ற வணிக பயணிகள் விமானங்களின் வாழ்நாள் மைல்களை (பயணதூரம்) கணக்கிடும்போது இதன் சேவை நீண்டகாலத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த 767 போயிங்கில் HAL மற்றும் IAI இரண்டு நிறுவனங்களும் இணைந்து கட்டமைப்பு மற்றும் வயரிங் மற்றும் சில அடிப்படை தொழில்நுட்பங்களை மாற்றியமைக்க உள்ளது. 

இந்நிலையில் ஆறு மல்டி ரோல் டேங்கர் ட்ரான்ஸ்போர்ட்டுகளுக்கான IAF விட்ட டெண்டரை இருமுறை ஏர்பஸ் கைப்பற்றியபோதும் விலை அதிகம் என நிதியமைச்சகத்தால் டெண்டர் கைவிடப்பட்டது. அதேபோல போயிங் நிறுவனமும் மல்டி ரோல் டேங்கர் ட்ரான்ஸ்போர்ட்டுகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர்பஸ் மற்றும் போயிங் இருநிறுவனங்களும் தற்போது போட்டியிட்டு விமானங்களின் விலையை குறைத்து வருகிறது. இருந்தபோதிலும் இந்திய நிறுவனமான HALம் இஸ்ரேலிய நிறுவனமான IAI யும் MMTT க்கான தயாரிப்புகளை குறைந்த செலவில் இந்தியாவிலேயே உருவாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய விமானப்படை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கருதப்படுகிறது.