
இந்தியாவின் எல்லையைப் பாதுகாப்பதில் இதுவரை நாம் கண்டிராத ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பப் புரட்சியை அடுத்த ஓராண்டுக்குள் அரங்கேற்ற மத்திய அரசு மிகத் தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்கள், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அதிநவீன 'Smart Border' திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.6,000 கி.மீ இந்த டிஜிட்ட்டல் அரண் அமைக்கப்படுகிறது. எதிரிகள் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு முற்றிலும் பலப்படுத்தப்பட்ட, ஊடுருவ முடியாத ஒரு பாதுகாப்பு அரணாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த 'ஸ்மார்ட் பார்டர்' திட்டம் எப்படி வேலை செய்யப் போகிறது? எளிமையாகச் சொன்னால், நம் வீரர்கள் 24 மணி நேரமும் நின்று காவல் காக்க முடியாத ஆபத்தான இடங்களில் எல்லாம் ஒரு கண்ணுக்குத் தெரியாத 'டிஜிட்டல் சுவரை' இந்தத் திட்டம் உருவாக்கப் போகிறது. பனிமூட்டமாக இருந்தாலும் சரி, நள்ளிரவு காரிருளாக இருந்தாலும் சரி, எல்லையை நோக்கி ஒரு பூனை நகர்ந்தால் கூட, அங்கு பொருத்தப்பட்டிருக்கும் ஸ்மார்ட் கேமராக்களும், லேசர் ரேடார்களும் அதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும். காடுகளிலும் மலைகளிலும் ராணுவ வீரர்கள் போக முடியாத உயரமான இடங்களை, வானில் பறக்கும் அதிநவீன ட்ரோன்கள் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், எல்லையில் எதிரிகள் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு ஒரு செக்யூரிட்டி சிஸ்டம் ரெடியாகப் போகிறது.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை தோண்டியோ அல்லது ட்ரோன்களைப் பயன்படுத்தியோ ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் கடத்துவதற்குப் பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதேபோல், வங்கதேச எல்லையில் உள்ள ஆறுகள், சதுப்புநிலங்கள் வழியாக கம்பி வேலி போட முடியாத இடங்களைப் பயன்படுத்தி நடக்கும் சட்டவிரோத ஊடுருவல்களும், கடத்தல்களும் முற்றிலும் தடுக்கப்படும். எல்லையில் ஏதேனும் ஒரு சின்ன அசைவு தெரிந்தால் கூட, அடுத்த நொடியே மெயின் கன்ட்ரோல் ரூமுக்கு அலர்ட் மெசேஜ் போய்விடும். இதனால், எல்லையில் இருக்கும் நமது பி.எஸ்.எஃப் (BSF) வீரர்கள் உடனடியாக ஸ்பாட்டுக்குச் சென்று எதிரிகளின் சதியை நொடியில் தவிடுபொடியாக்கிவிடுவார்கள்.
நமது அண்டை நாடுகள் கொடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு, எல்லையில் அமித் ஷா அமைக்கப்போகும் இந்த டிஜிட்டல் இரும்புத்திரை ஒரு மிகச் சரியான, மரண மாஸான பதிலடியாக இருக்கும். 140 கோடி மக்களின் பாதுகாப்பையும் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக மாற்றப்போகும் இந்த 'Smart Border' திட்டம், தேசப் பாதுகாப்பில் இந்தியா எடுத்து வைத்துள்ள ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சுவடு!
