
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தமிழக அரசுக்கு மிகப்பெரும்பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் அரசிதழ்களில் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இந்த தீர்ப்புக்கு ஸ்டாலினுக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்தி அமர்களப்படுத்தினார்கள் திமுகவினர். ஆனால் பாராட்டு விழா அடுத்த நொடியே திமுக அரசை மொத்தமாக முடிந்துவிட்டசென்னை நீதிமன்றம்.
இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் நிலுவையில் உள்ளது. அதைத் திரும்ப பெறாமல் புதிதாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது.
மேலும், இந்த சட்ட திருத்தங்களுக்கான தீர்க்கமான காரணங்கள் எதுவும் தமிழக அரசால் தெரிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அந்த அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளதா, அமைச்சரவைக்கு உள்ளதா அல்லது மாநில அரசின் நிர்வாக தலைவரான ஆளுநருக்கு உள்ளதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. தமிழக அரசின் இந்த சட்ட மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு எதிராக உள்ளன. எனவே, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான இந்த மசோதாக்கள் சட்ட விரோதமானவை என அறிவிக்க வேண்டும்,” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 21) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 10 பல்கலைக்கழகங்களில் இரண்டில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அவசரகதியில் இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்கக் கூடாது.அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது, முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். அரசியல் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிப்பது உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பதுபோல உள்ளது’ என்று வாதிடப்பட்டது.இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கவில்லை என்ற அரசின் ஆட்சேபத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டன