
திருப்பரங்குன்றம் மலைமேல் பக்தர்கள் செல்ல, 20 நாட்களுக்கு பின் போலீசார் நேற்று அனுமதி அளித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாத பிரச்னையில், 20 நாட்களாக, திருப்பரங்குன்றம் முழுதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். டிச., 2 முதல் மலைக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.டிசம்பர் 3 ஆம் தேதி 144 தடை உத்தரவு அமலானது.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன், மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவிற்காக முன்னேற்பாடுகள் செய்ய, நான்கு இஸ்லாமியர்கள் மலைமேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தர்கா நிர்வாகிகள் சந்தனக்கூடு விழாவிற்காக, மலைமேல் கொடியை கொண்டு சென்றனர்.
இந்நிலையில், 20 நாட்களுக்கு பின், அனைவரும் மலைமேல் செல்ல போலீசார் அனுமதித்தனர். இரும்பு தடுப்புகளை அகற்றினர்.
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் ஜனவரி 6ல் சந்தனக்கூடு விழா நடக்கிறது. அதுவரை இஸ்லாமியர்கள் மலைமேல் தர்காவிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான், தற்போது அனைவரும் மலைக்கு செல்ல போலீ சார் அனுமதித்துள்ளனர்.சந்தனக்கூடு திருவிழா இல்லையென்றால் அனுமதித்திருக்க மாட்டார்கள். இந்த அனுமதி ஜன., 7க்கு பின் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என கேள்விகளை முன்வைத்துளார்கள். அதுமட்டுமில்லாமல் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகளில் முருகன், சேவல் படத்துடன் மஞ்சள் கொடி கட்டியும், வாசலில் விளக்கேற்றியும் வருகின்றனர். நேற்று மலை அடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோயில் தெரு மக்கள், இஸ்லாமியர்களுக்கு சந்தனக்கூடு விழாவிற்கு மலையில் கொடியேற்ற அனுமதிக்கிறீர்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி எங்களுக்கு தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.
அந்த தெருவிலுள்ள அனைத்து வீடுகளிலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முருகன், சேவல் படம் பொறித்த மஞ்சள் கொடிகளை பெண்கள் கட்டியுள்ளனர். உச்சியிலுள்ள தீபத்தூணில் 1984-ல் தீபம் ஏற்றியுள்ளதாக கைதான பெண்கள் கூறுகின்றனர்.மேலும் இந்த தேர்தலில் கண்டிப்பாக திருப்பரங்குன்றம் விஷயம் திமுகவுக்கு இடியை இறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
