24 special

பதற்றத்தில் புடினிடம் ஓடி அசிங்கப்பட்ட பாக் பிரதமர்.. காட்டு தீயாக வைரலாகும் வீடியோ.. இது தாண்டா இந்தியா பவர்...

VLADIMIRPUTIN,SHEHBAZSHARIF
VLADIMIRPUTIN,SHEHBAZSHARIF

உலக அரசியல் மேடையில் நாடுகள் மதிப்பிடப்படுவது இன்று வார்த்தைகளால் அல்ல; நடத்தை, மரியாதை மற்றும் நம்பகத்தன்மையால்தான். அந்த அளவுகோலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வித்தியாசத்தை, சமீபத்திய ஒரு சம்பவம் வெளிப்படையாகக் காட்டியுள்ளது.


துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் எர்டோகனுடன் தனியறையில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அதே நேரத்தில், புடினை சந்திக்க விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தருடன் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், நடைமுறை மரியாதைகளை மீறி, அனுமதியின்றி அந்த ஆலோசனை அறைக்குள் அவர் நுழைந்த சம்பவம், உலக தூதரக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

துர்க்மெனிஸ்தானில் நடந்த சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நீண்ட நேரம் காத்திருந்தார். பொறுமையிழந்த பாக் பிரதமர் புடின் இருந்த அறைக்குள் அவர் நுழைந்த சம்பவம், சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. துர்க்மெனிஸ்தான் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெற்ற 30-ஆவது ஆண்டு நிறைவை நட்பு நாடுகளுடன் இணைந்து கொண்டாடியது. அந்த நிகழ்வில் 

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இருவரும் ரஷ்ய  அதிபர் அருகிலுள்ள அறையில் சுமார் 40 நிமிடங்கள் புடினை காண  காத்திருந்தனர்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பொறுமையிழந்த ஷெரீஃப், புடின் துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்தார்.ஷெபாஸ் ஷெரீப் திடீரென உள்ளே நுழைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஷெரீஃப் சுமார் 10 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.இது  இராஜதந்திர ரீதியிலான தவறு (Diplomatic Misstep) என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள் நாடு எப்படி வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள் என்று என விமர்சனமும் எழுந்துள்ளது  

இந்த நிகழ்வு குறித்து எழுந்த விமர்சனங்கள், ஒருவரின் தனிப்பட்ட பொறுமையைப் பற்றியது அல்ல. அது, உலகம் பாகிஸ்தானை எந்த கோணத்தில் பார்க்கிறது என்பதையே பிரதிபலிக்கிறது. அவசரம், தன்னம்பிக்கை குறைவு, நடைமுறை மரபுகளின் மீறல் இவை அனைத்தும் ஒரு நாட்டின்  முகத்தை உலகிற்கு காட்டும் சைகைகளாகவே பார்க்கப்படுகின்றன.

உலக நாடுகள் பாகிஸ்தானை பார்க்கும் நிலை வேறு அதற்கு எதிர்மாறாக இந்தியாவைப் பார்க்கும் நிலை வேறு. பற்றிய உலக பார்வை பார்க்கிறது.சர்வதேச மாநாடுகள், உச்சி மாநாடுகள், இருதரப்பு சந்திப்புகள் எங்கு நடந்தாலும், பிரதமர் மோடியை மையமாகவே வைத்தே விவாதிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கே வருவது, அல்லது தங்களுடைய பயண அட்டவணையை இந்தியாவை மையமாக வைத்து திட்டமிடுகிறார்கள்.  இந்த மாற்றத்தின் அடையாளம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.  இந்தியா இன்று உதவி தேடும் நாடு அல்லஉதவிகளை கொடுக்கும் நாடக மாறியுள்ளது.

மேலும் கடந்த இருபது ஆண்டுகளாக உலகளாவிய டிஜிட்டல் வளர்ச்சியின் மையமாக சீனா இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அங்கு ஏற்பட்ட புவிசார் அரசியல் பிரச்னைகள், பாதுகாப்பு குறைபாடுகள், கொள்கை மாற்றங்கள்  போன்வற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறி வருகின்றன. அவர்கள் இந்தியாவை நோக்கி வருகிறார். இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியாவில் முதலீடுகளை குவிக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலகளவில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை தந்திருந்தார்.  அப்போது  பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனை தொடர்ந்து தொடர்ந்தே பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக ட்ரம்ப் பேசியுள்ளார்.