24 special

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆப்பு வைத்த திருமா ! காங்கிரஸ் எதிராக விசிக?! என்ன இப்படி ஆகிப்போச்சு! ஸ்டாலின் தலையில் விழுந்த இடி!

THIRUMAVALAVAN,SELVAPERUNTHAGAI
THIRUMAVALAVAN,SELVAPERUNTHAGAI

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறதுஆளும் தரப்பின் கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள், இப்போதே ‘சீட் ஒதுக்கீட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்’ எனக் கறார் காட்டத் தொடங்கியிருக்கின்றன. விடுதலை சிறுத்தை கட்சி ஒரு படி மேலே போய்காங்கிரஸ் கட்சியைவிட அதிக சீட் வேண்டும்’ என அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் குரலை உயர்த்தினாலே ஆவேசமாகும் வழக்கம்கொண்ட முதல்வர் ஸ்டாலின் , விடுதலை கட்சி  தலைவரின் கட்சி நடவடிக்கைகளை ஒருவிதத்தில் ரசிக்கத் தொடங்கியிருக்கிறாராம். 


இந்த வாதத்தை வைத்தே, காங்கிரஸ்  கட்சிக்கான சீட் ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைக்க முடியும் என நினைக்கிறாராம். இந்த விஷயம், காங்கிரஸ்  கட்சியின் ஆவேசத் தலைவரான செல்வ பெருந்தகைக்கு  தெரியவர, அவர் த திருமாவுக்கு எதிராக அறிவாலயத்தில் வெகுண்டாராம். ‘சீட் கேட்க எங்களை எதற்கு இழுப்பானேன்?’ என விசிக இரண்டாம் கட்ட  தலைவர்களுக்கு  போன் பண்ணி ஆதங்கப்பட்டாராம். இது இப்படியே போனால் சரிவராது என எண்ணிய தமிழக காங்கிரஸ் ஆதவ் அர்ஜுனாவுக்கு கால் செய்துள்ளது திமுக தரப்பை கொதிப்படைய செய்துள்ளதாம். 

அதுமட்டுமில்லாமல் அதிமுக - பாஜக கூட்டணியின் பலவீனம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும் திருபுவனம் அஜித் குமார் மரணத்தை தொடர்ந்து பாஜக-அதிமுக கூட்டணி வெளிப்படையாக தங்களின் ஒற்றுமையை நிரூபித்துள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் பல முரண்களை தற்போது வெளிப்படையாக பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் செயலாளர் பெ.சண்முகம் “திமுக -வின் வெற்றி வாய்ப்பு.. விஜய் எடுத்து வைக்கும் நகர்வுகளை பொறுத்தது” என பேசியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் நிலவும் சர்ச்சை பொது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கிடையே கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்" - என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.இதற்க்கு பதிலடியாக தான் விசிகவை வைத்து காங்கிரசுக்கு செக் வைத்துள்ளது திமுக 

இது ஒருபுறம் இருந்தால்  பாமக பிரச்சனையை வைத்து விடுதலை சிறுத்தைகளுக்கு செக் வைக்கிறது திமுக.  ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார்.தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.மேலும் கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

 காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்களைக் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பிரச்னை வரும். கூடுதல் இடங்களைத் தருவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை" ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் திமுகவை வைத்து தான் வெற்றி பெறுகிறது. ஆட்சியை தீர்மானிக்கும் 10 இடங்களில் விடுதலை சிறுத்தைகளின் தயவு திமுகவுக்கு இருக்கிறது. அதே போல் தான் காங்கிரசும்  குறிப்பிட்ட தொகுதிகளில் காங்கிரசின் ஒட்டு இல்லாமல் திமுக வெற்றி பெற போவதில்லை. இப்படி திமுக போட்ட பிளானில் திமுகவே சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.