Tamilnadu

மத்திய அரசா 6 ஆயிரம் கொடுத்துச்சு... இது தெரியாம போச்சே.. வாய் பிளக்கும் விவசாயிகள்...!

modi
modi

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு விவசாயிகளின் நலனில் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு கிராமத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.


அந்த வகையில் இதுவரை கொண்டு வந்த மிகச்சிறந்த பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் ஓட்டு கேட்க தொடங்கியிருக்கின்றது பாஜக. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வீடுகட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவது, செல்வமகள் சேமிப்பு திட்டம், ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு, ஜன்தன் வங்கி கணக்கு, கழிப்பறை கட்ட 12 ஆயிரம் மானியம், விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6000 ரூபாய் நேரடி வங்கி கணக்கில் செலுத்துவது, விவசாயி பென்ஷன், இலவச தண்ணீர் குழாய் இணைப்பு, முத்ரா கடன் திட்டம், இலவச சொட்டு நீர் பாசனம், இரண்டு ரூபாய்க்கு இரண்டு லட்சம் காப்பீடு, இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கிறது பாரதிய ஜனதா கட்சி.

அந்த வகையில், கிராமப்புறங்களில் விவசாய மக்களிடம் வருடந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்  மத்திய அரசின் திட்டத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் போது, ஆமாம் எங்கள் வங்கி கணக்கில் 6 ஆயிரம் கிடைத்தது. இது மத்திய அரசு கொண்டு வந்தது தானா என வியப்பாக கேட்டு மகிழ்வதாக பாஜக தொண்டர் ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார்.


மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போட மேற்குறிப்பிட்ட திட்டங்களை எடுத்துரைத்தும், குறிப்பாக மத்திய அரசின் திட்டம் அனைத்தும் லஞ்சம் தராமல் பயன்பெற பாஜகவுக்கு வாக்களியுங்கள் என வாக்கு  சேகரிக்கிறது பாஜக. வருகிற உள்ளாட்சித் தேர்தல்  மூலமாக பாஜகவின் பலம் நகர்ப்புறங்களில் எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக தெரிந்துகொள்ளும் மிக முக்கிய வாய்ப்பாக பாஜகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

More Watch videos