24 special

இந்து என்று சொன்ன பிறகு நடந்த அட்டூழியம்..ஒட்டு மொத்த இந்தியாவும் அதிர்ச்சி.... பகல்ஹாமில் என்ன நடந்தது.!

pm modi
pm modi

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நேற்று நடத்திய, காட்டுமிராண்டித்தனமான  துப்பாக்கி சூடு தாக்குதலில் 28 பேர் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பியது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டு மக்களாட்சியும் நடக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் இயற்கை அழகை ரசிக்க, நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.


இதனால் காஷ்மீர் மக்களின் பொருளாதரம் வேகமாக மேம்பட்டு வருகிறது. இந்த இயல்பு நிலையை, அமைதியை சீர்குலைக்கவும், காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தவும் இந்த கோழைத்தனமான தாக்குதலை, ஒட்டுமொத்த  மனிதகுலத்திற்கும் எதிரான  பயங்கரவாதிகள் நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை சோதனை செய்து, அவர்களின் மதத்தை உறுதிப்படுத்திய பிறகு சுட்டுக் கொன்றுள்ளனர் என்று வரும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில், உயிரிழந்த சுற்றுலா பயணிகள் தரையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது.குறிப்பாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கணவனின் உடலுக்கு அருகில் சோகத்தில் உறைந்த அவரது மனைவி அழுவதற்கு கூட ஆற்றலின்றி அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தது நெஞ்சை உலுக்கியது.

இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக சுற்றுலா பயணிகளின் பெயர் மற்றும் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கேட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். ஒரு சில பயணிகளின் ஆடைகளை களைந்த பின்னர் அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ஒருவர். ஏப்ரல் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டு மனைவி உடன் சுஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. 26 வயதான இவருக்கு ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடந்ததுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு,பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - -இ- - தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளையான, 'ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்று உள்ளது.மேலும் அங்கிருந்து வந்த செய்திகள் ஓவொன்றும் மாந்தடி உலுக்குவதாக இருந்தது "அவர்கள் வந்து என் கணவரிடம் பெயர் என்ன எனக் கேட்டார்கள். அவர் பெயரை சொன்னதும் தலையிலேயே சுட்டார்கள்" என ஒரு பெண் கூறியது மனதை உலுக்கியது. 

தீவிரவாதிகள் எந்த ஜாதி எனப் பார்த்து சுடவில்லை. அவர்களை பொறுத்தவரை அவர் ஒரு 'இந்து' அவ்வளவே சுட்டவர்கள் அவர் தமிழனா, தெலுங்கனா, கன்னடனா, மலையாளியா, இந்திக்காரனா, வங்காளியா, குஜராத்தியா என பார்த்து சுடவில்லை. அவர்களை பொறுத்தவரை அவர் ஒரு 'இந்து' அவ்வளவே. என மக்கள் குமுறி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹெல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, தனது சவுதி பயணத்தை ரத்து செய்துகொண்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்  டாக்டர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.