24 special

கோவை சம்பவத்துக்கும் காஷ்மீர் சம்பவத்துக்கும் தொடர்பா? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் முகாமிட்ட என்.ஐ.ஏ!

kashmir
kashmir

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜமேஷா முபின் என்பவன்  இந்த சம்பவத்தில் உயிரிழந்தான். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வளையத்துக்குள் சென்றது.


இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ ஷேக் ஹிதயாத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரஹ்மான், ஷரண், அபு ஹனிபா ஆகியோர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய சம்பவங்களில் இவர்களுக்கு பங்கு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இவர்களுடன் சேர்த்து கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஷேக் ஹிதாயத்துல்லா, உமர் பரூக் ஆகியோர் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தேவையான வெடிபொருட்களையும், தேவையான கருவிகளையும் வாங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர் விசாரணையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரபி கல்லுாரிகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை, ஆயுத பயிற்சி களங்களாக பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார்படுத்தி வருவதும் தெரியவந்தது 

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் என்ஐஏ அதிரடி சோதனைகளை நடத்தியது. தமிழகத்தில், 20 இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போல, சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அல்பாசித் என்பவரை கைது செய்தது மயிலாடுதுறை மாவட்டம் நீடுரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா, 41; ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். 'இக்காமா' என்ற தற்காப்பு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். இதனால், 'இக்காமா' சாதிக் பாட்ஷா என்று, அழைக்கப்படுகிறான் 

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீ ஹிந்துவா? முஸ்லிமா? என்று கேட்டு விட்டு, தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறதுஇந்தத் தாக்குதலில் இந்திய கடற்படை வீரர் வினய் நர்வால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்க்கு 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. அதேபோல, ஐதராபாத்தில் பணியாற்றி வரும் உளவுத்துறை அதிகாரி மணிஷ் ரஞ்சன், மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பிரசாத் சாத்பதி, சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் காடதியா ஆகியோரும் இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் 'நாங்கள் தான் இருக்கிறோம்' என்று 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா-வின் ஒரு பிரிவாக சொல்லப்படுகிறது.

'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பு ஆன்லைன் மூலம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தல், ஆயுதங்களை வாங்குதல், போதை பொருள்களை கொண்டு வருதல், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தல் போன்ற நாசவேலைகளை செய்துவருகிறது எனவும் கூறப்படுகிறது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பின் தலைவரான ஷேக் சஜ்ஜாத் தீவிரவாதி என அறிவித்தது. தற்போது இந்த அமைப்பின் கீழ் தான் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கும் கோவை கார் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்