Cinema

அந்த ஒரு குறை தான் RRR குறித்து பரவும் தகவல்.... செம்ம ட்ரீட்..!

Rrr movie
Rrr movie

RRR திரைப்படம் குறித்து பிரகாஷ் என்பவர் எழுதிய தகவல் இணையத்தில் வைரலாகிறது இது குறித்து அவர் பகிர்ந்த தகவலை பார்க்கலாம் :-


தெலுங்கு சினிமாக்கள் ஏன் தற்போது தேசிய அளவில் ஏன் உலக அளவில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு உதாரணம் ஆர்.ஆர்.ஆர்.  அதிலும் ராஜமௌலி எனும் ராஜசிற்பியால் செதுக்கப்படும் படங்கள் ஒவ்வொரு வகையிலும் ஈடு இணையில்லாமல் தற்போதைய இந்திய சினிமாவை ஆளுமை செய்கின்றன.

ஆங்கிலேயர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாமை எதிர்த்து தனித்தனியே போராடியவர்கள் 'அல்லூரி சீதாராம ராஜு'வும்,  பழங்குடிகள் தலைவர் 'கொமரம் பீம்' அவர்களும்.  இதில் சீதாராம ராஜு,  1882-ல் ஆங்கிலேயர்கள் அறிவித்த 'மெட்ராஸ் வன சட்டத்தை' எதிர்த்து போராடினார்.  கொமரம் பீம் எனும் 'கோண்ட்' பழங்குடி தலைவரோ, 1930களில் ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பெரும் புரட்சியை உருவாக்கியவர்.  இந்த இரு பாத்திரங்களும் ஒன்றாக இணைந்து போராடி இருந்தால் எப்படி இருக்கும் ? எனும் ராஜமௌலியின் கற்பனையின் உதித்த சிந்தனையே படத்தின் கதையாக தவழ்கிறது. இந்த இரு சரித்திர பாத்திரங்களை தழுவி இருந்தாலும், படத்தின் நிகழ்வுகள் பெரும்பாலும் கற்பனையே. 

நீங்கள் 'லாஜிக்காக' மட்டுமே படம் பார்ப்பவர் என்றால் இது போன்ற படங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இது ஒரு பொழுது போக்கு படம்,  தேச பக்தி படம்,  குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய படம்,  அதி அற்புதமான காட்சி அமைப்புகள்,  பாடல்கள்,  நடனங்கள் என பார்த்து ரசிக்கக் கூடிய படம்.  

ஜூனியர் என்.டி.ஆர்.  புலியோடு சண்டையிட்டு அதனை பிடிக்கும் காட்சிக‌ள், ஸ்ரீராமனை போல் ராம் சரன் காட்டில் அம்பு எய்யும் காட்சிக‌ள்,  மிருகங்களை எல்லாம் ஏவிவிட்டு அவை தாறு மாறாக பாயும் காட்சிகள் என‌ வி.எஃப்.எக்ஸின் உச்சம் தெரிகின்றது.  ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படி படத்தில் பல காட்சிகள் பாகுபலி தரத்திற்கு உள்ளன.  

என்ன பாகுபலி போல் தமிழ் வசனங்களுக்கு இயக்குனர் அத்தனை மெனக்கெட்டதாய் தெரியவில்லை என்பது மட்டும் ஒரு சிறு குறையாக இருந்தது. மற்றபடி ஒரு தோட்டாவின் விலை, ஒரு இந்தியனின் உயிரின் விலையை விட அதிகமானது என நினைக்கும் வெள்ளையர்களின் இறுமாப்பை அடக்கி,  இந்தியனின் பெருமையை நிலைநாட்டுகிறது படம். "உங்களுக்கெல்லாம் கலைனா என்னடா தெரியும் ?"

என  வெள்ளையன் ஒருவன் விதவிதமாக தங்கள் மேற்கத்திய நடன அமைப்புகளை விவரித்து 'பில்டப்' கொடுக்க, "நாட்டு நாட்டு நாட்டு" என ஆடிக் காட்டி இந்தியர்களின் திறமையை இரு கதாநாயகர்களுக்கும் உணர்த்துவது தியேட்டரையே அதிர வைக்கிறது.  அசர வைக்கும் நடனம்.  புஷ்பாவில் ஸ்ரீ தேவி பிரசாத் கலக்கியதை போல் மரகதமணி இதில் கலக்கியிருக்கிறார்.  நடன இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என ஒருவரோடு ஒருவர் திறமையில் போட்டி போடுகின்றனர்.

தற்போது தமிழ் சினிமா முழுக்க முழுக்க மிஷநரிகளின் பிடியில் சிக்கி,  திராவிட மாடல், நாத்திகம்,  இந்து விரோதம் என பாழுங் கிணற்றில் விழுந்து விட்ட நிலையில்,  தெலுங்கு படங்கள் பாரத கலாச்சாரத்தை தூக்கி பிடித்து, 'பேன் இந்தியா' திரைப்படங்களாக மாறி வருகின்றன. படத்தில் இடம் பெறும் அந்த 'ஸ்ரீராமன்' காட்சிக்காகவே பத்து முறை பார்க்கலாம் என்பேன்.  அப்படியே உணர்ச்சிகள் ஜிவ்வென்று எழுகின்றன. பன்றிக்கு பூணூல் என திரியும் சமூக விரோத கோஷ்டிகள், பர்னாலோடுதான் பார்க்க வேண்டும்.

சில்லறை பயல்களை எல்லாம் ஹீரோவாக காட்டும் திராவிஷ‌ மாடல் சினிமா எங்கே ?  அவதார புருஷன் ஸ்ரீ ராமனை ஒரு ரோல் மாடலாக, ஹீரோவுக்கான இலக்கணமாக‌ காட்டியிருக்கும் ராஜமௌலி எங்கே ?

படத்தில் ராம்சரன் சூரிய புத்திரன் ராமன் என்பதற்கு அடையாளமாக நெருப்பு அம்சமாகவும்,  பீம் பாத்திரம் ஹனுமன்/பீமனை குறிக்கும் நீரின் அம்சமாகவும் காட்டியுள்ளார் இயக்குனர்.  உண்மையில் ஹனுமனும், பீமனும் வாயுவின் புத்திரர்கள் எனும் நிலையில் காற்றின் அம்சமாக காட்டியிருக்கலாமே என அடியேனுக்கு தோன்றியது. 

திரை அரங்கில் 3டி கண்ணாடி போட்டு குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்க கூடிய படம்.  இது போன்ற படங்களை 'ஓ.டி.டி'.யில் எல்லாம் பார்த்து வீணடித்து விடாதீர்கள்.  மொத்தத்தில் 'புஷ்பா',  'அகண்டா'...இப்போது 'ஆர்.ஆர்.ஆர்'.... நம்மை பார் பார் பார் என்கிறது என குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ்.