Cinema

என்ன சூர்யா இப்படி ஆகிப்போச்சு... எங்க இப்போ குரல் கொடுங்கள் பார்க்கலாம்?

Actor Surya
Actor Surya

தமிழக அமைச்சர் KKSSR .ராமசந்திரன் குறவர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர் ஒருவரை நிற்க வைத்து அருகில் வர கூட அனுமதிக்காமல் அவமதித்த சம்பவம்தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. இதில்தான் தற்போது நடிகர் சூர்யாவும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.


வணவேங்கை கட்சியை சேர்ந்த இரணியன் என்பவர் தங்கள் சமுதாயம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துள்ளார்,  இதே நிலை நீடித்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் KKSSR ராமசந்திரனிடம் அழைத்து வந்துள்ளனர்.

உள்ளே சென்ற இரணியன் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களை உட்கார கூட சொல்லாமல் நிற்க வைத்து உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன் என்று கூட கூறாமலும் விரட்டி விடாத குறையாக அனுப்பி இருக்கிறார், இது தீண்டாமை மட்டுமல்ல மனித நாகரீகம் அற்ற செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன்னை அருகில் கூட வர விடாமல் தள்ளி நிற்க அமைச்சர் கூறினார், சோபாவில் இடம் இருந்து கூட எங்களை உட்கார கூட அனுமதிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமைச்சர் kkssr மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர், இவ்வளவு பெரிய சம்பவம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது மேலும் பாதிக்கப்பட்ட நபரும் தானாக முன்வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி இருக்கிறார்.

இப்படி இருக்கையில் வெளி மாநிலத்தில் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா எங்கே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், ஜெய் பீம் படத்தில் நரிக்குறவர்கள் சமுதாயத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி வாங்கி கொடுக்கும் கதா பாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார்.

தற்போது அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரை மனிதாபி மானம் அற்ற முறையில் அமைச்சர் நிற்க வைத்து கால் மேல் கால் போட்டு அதிகார மமதயை உண்டாக்கி இருக்கும் சூழலில் ஏன் சூர்யா போன்றோர் குரல் எழுப்பவில்லை என பலரும் சூர்யாவை விமர்சனம் செய்தி வருகின்றனர்.

சூர்யா குறவர் சமுதாய மக்களை பயன்படுத்தி சினிமாவில் நடித்து பணம் சம்பாரிக்க முடியும் ஆனால் அதே மக்களில் ஒருவருக்கு பாதிப்பு என்றால் குரல் கொடுக்க முடியாதா எனவும் சூர்யாவை நோக்கி கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.

பாஜக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் என்றால் சூர்யா குடும்பமே முன்வந்து தங்கள் கருத்துக்களை சொல்லும் வேலையில் திமுக அமைச்சர்கள் செயல்பாடுகளை பாதிக்கப்பட்ட நபர்களே வெளியில் வந்து சொல்லிய பிறகும் சூர்யா குரல் கொடுக்காமல் இருப்பது சூர்யாவின் உண்மை முகம்தான் என்ன என்ற விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.