24 special

SIR வழக்கில் உச்சநீதிமன்றம் போட்ட போடு! நீதிமன்றத்தில் கபில் சிபிலை,அலறவிட்ட நீதிபதிகள்! அதிர்ந்த திமுக

MKSTALIN,COURT
MKSTALIN,COURT

தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் என்னவென்றால் அது ஒரே ஒரு விஷயம் தான் வாக்காளர் தீவிர சீர்திருத்த நடவடிக்கை. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனஎதிர் கட்சிகள் சார் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு வந்தது. .தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் சார் பணிகளை நடத்தியது. அதைத் தொடர்ந்து இப்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சார் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தொடங்கியது. 


இப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "சார் எனப்படும் இந்த சிறப்புத் தீவிர மறுஆய்வு செயல்முறை சாதாரண வாக்காளர்களுக்கு அரசியலமைப்பிற்கு முரணான சுமையைச் சுமத்துகிறது.. பலர் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் சிரமப்படுவார்கள்.. இதனால் அவர்கள் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இது மழைக்காலம், அறுவடை காலம், என உப்பு சப்பில்லாத காரணங்களை முன்வைத்து வாதாடினார். மேலும் இந்த நடவடிக்கை அடிப்படை ஜனநாயகத்தையே பாதிக்கிறது" என கூறினார்  

இதற்கு பதிலடி கொடுத்த  தலைமை நீதிபதி சூர்யா காந்த் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டே தான் இருக்கும் அதற்காக நடைமுறைகளை நிறுத்தி வைக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் என்பது மழைக்காலம் என்று எல்லோருக்கும் தெரியும் மக்களைத் தேடி தேர்தல் ஆணையத்தின் அலுவலர்கள் வீட்டுக்கே போவார்கள் என்னும் நிலையில் அறுவடைக்கு எந்த பாதிப்பும் வராது. என கூறி கபில் சிபியை ஒரு கை பார்த்து விட்டார். 

மேலும்  ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான இறுதியான ஆதாரம் இல்லை.மேலும், ஒரு வாக்காளரைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6இல் உள்ள தகவல்கள் சரியானது தானா என்பதைத் தீர்மானிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதையும் இந்த அமர்வு தெளிவுபடுத்தியது.  இது தொடர்பாக மேலும், "ஆதார் என்பது சலுகைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் மட்டுமே. ரேஷன் பெறுவதற்காக ஒருவருக்கு ஆதார் வழங்கப்பட்டதால் மட்டும் அவர் வாக்காளராகவும் மாற வேண்டுமா? அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் அங்கு வேலைக்கு வந்துள்ளார் என்றார் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா?" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையம் ஒரு தபால் அலுவலகம் போலச் செயல்பட்டு, படிவம் 6ன் கீழ் தாக்கல் செய்யும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தானாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது. அதாவது தேர்தல் ஆணையம் தனக்கு வரும் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அதைச் சரிபார்க்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

முன்பு இதுபோல ஆய்வு நடத்தப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்SIRஐ நிறுத்தக்கோரிகாகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்க முடியாது கூறி கபில் சிபலை ஓடவிட்டார்கள் நீதிபதிகள் அதுமட்டுமில்லாமல் நீதிபதி சூர்ய காந்த், " தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பால் அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு இதைச் செய்கிறது. நடைமுறையில் சில குறைபாடுகளைச் ஏற்படலாம் சுட்டிக்காட்டுங்கள், அவர்கள் சரிசெய்வார்கள்"  தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும் என கூறியுள்ளார்.