
இந்திய மண்ணில் வளர்ந்த ஒவ்வொரு மனிதனின் இரத்தத்திலும் ஓடும் ஒரு உண்மை இருக்கிறது இந்தியா யாரையும் சார்ந்திருக்கும் தேசமல்ல…
அவசியம் வந்தால் தன் திறனால் உலகையே மாற்றிடும் சக்தி கொண்ட தேசம்.இந்தியா எடுத்திருக்கும் மாபெரும் முடிவு உலகமே இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.உலகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கும் மின்சார வாகனங்கள்…விண்வெளி நோக்கி பாயும் ராக்கெட்டுகள்…எல்லைகளை காக்க பறக்கும் போர் விமானங்கள், உலகின் நவீன தொழில்நுட்ப ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பின்னால் இயக்கும் இதயம் அரியவகை கனிமங்கள்” ஆகும். இந்த தாதுக்கள் ஏராளமான நவீன உபகரணங்கள் தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருள் ஆகும்.
அரியவகை கனிமங்கள் என்பது பெயருக்கு மட்டும் அரியவை அல்ல. அவற்றை கண்டுபிடித்து சுத்திகரிப்பது மிகக் கடினமான பணியாகும்
இதனால் உலகளவில் சில நாடுகளே இவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிகின்றன. 2023ஆம் ஆண்டுவரை, உலகில் உற்பத்தியாகும் அரியவகை கனிமங்களின் 99 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.சீனா ஏற்கனவே எட்டு வகை கனிமங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது. இப்போது அதற்கு மேலாக மேலும் ஐந்து அரியவகை கனிமங்களின் ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதை உடைக்க இந்தியா எடுத்திருக்கும் 7,280 கோடி திட்டம் உலகளவில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது காப்பர், கிராஃபைட், அரிய உலோகங்கள், சிலிக்கான், டின், டைட்டானியம், ஜிர்கோனியம் என்ற 7 முக்கிய தாதுக்களுக்கு பிராசஸிங் திறனைக் கொண்டுள்ளது
இந்தியாவிடம் 6.9 மில்லியன் டன் அரிய உலோக இருப்புகள்இருக்கிறது , அவற்றை சுத்திகரித்து, பிரித்து, காந்தமாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவின் இத்திட்டம் நாட்டின் தொழில்துறை பாதுகாப்பிற்கும், தேசிய நலனுக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும்.
சீனா சமீபத்தில் தனது ஏற்றுமதி விதிமுறைகளை மாற்றியபோது, உலகம் முழுவதும் EV நிறுவனங்களும், மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் திணறினர். இந்தியாவும் அதே பாதிப்பை சந்தித்தது. இதே சூழலில், “எந்த நாடும் எங்களை அசைக்க முடியாது” என்கிற நம்பிக்கையுடன் இந்தியா தனது உற்பத்தி திறனை 7 ஆண்டுகள் காலக்கட்டத்தில் முழுமையாக உருவாக்க முடிவு செய்துள்ளது.
சுரங்கம் முதல் காந்த தயாரிப்பு வரை முழு உற்பத்தி சங்கிலியை இந்தியா உருவாக்கப்போவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. இது வெறும் தொழில்துறை முன்னேற்றம் மட்டுமல்ல; .2030க்குள் காந்த தேவைகள் இரட்டிப்பாகும் நிலையில், இந்தியாவே உலகின் நம்பகமான உற்பத்தி மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் செமிகொண்டக்டர் , பசுமை ஆற்றல் திட்டங்கள், மின்னணு உற்பத்திக்கு தேவையான கனிமங்கள் இந்தியாவில் கிடைக்கும்
ஒரு காலத்தில் “சீனாவைத் தவிர வேறு யாரிடமும் இந்த காந்தங்கள் கிடையாது” என்று உலகம் பேசினால்…இனி வரும் காலத்தில்“இந்தியாவே உலக காந்தத் துறையின் புதிய நாயகன்”என்று பேசப்போகிறது.இந்த முடிவு பொருளாதார முன்னேற்றம் மட்டும் அல்லநாட்டின் முன்னேற்றத்திற்காக, எதிர்கால தலைமுறைக்காக எடுத்த தேசப்பற்று கலந்த மாபெரும் தீர்மானம்.
