24 special

குஜராத் அரசியலில் திடீர் திருப்பம்..! ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா !

Amitsha
Amitsha

குஜராத் : இந்த வருட இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மமதா அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் தற்போதே காய்களை நகர்த்த துவங்கியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தலுக்காக திராவிட மாடலான இலவசங்களை இந்த தேர்தலிலும் கையிலெடுக்கிறார்.


வழக்கம் போல காங்கிரஸ் தனது மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் குஜராத்திற்கு பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி.நட்டா ஆகியோர் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின்போது காந்திநகர் பிஜேபி தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் இளம் நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.

அவர் பேசுகையில் திரி தேவ் பாணியை ( பூத் ஏஜென்ட், ஒரு இளம் நிர்வாகி , ஒரு மூத்த தலைவர் ஒவ்வொரு பூத்திலும் தேர்தல்பணிக்காக நியமிக்கப்படுவது) கடைபிடிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதேபோல தொண்டர்களிடம் பேசுகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல முக்கியமான தலைவர்கள் தேசப்பணி செய்ய பிஜேபியில் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை கேத்பிரம்மா தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்வின் கோட்வால் தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு தன்னை பிஜேபியில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்  " நான் பணிபுரிந்த கட்சியால் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளானேன்.  நான் சார்ந்திருக்கும் சமுதாயம் பழங்குடி சமூகத்தில் இருப்பதாக பாசாங்கு செய்கிறது.

பிரதமர் மோடி வளர்ச்சிக்கான மனிதர். இதுபோன்ற வளர்ச்சியை நோக்கிய மனிதரை இந்தியா ஒருபோதும் பெறமுடியாது. 2007ல் மோடிஜி என்னுடன் பேசியபோது பழங்குடியின சகோதரர்கள் அனைவருக்கும் வீடு இருக்கவேண்டும் என கூறியிருந்தார். காங்கிரஸ் காங்கிரசை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.