24 special

திருப்பரங்குன்றம் விஷயம் படித்து படித்து சொல்லியும் கேட்காத ஸ்டாலின்.. மொத்தமும் போச்சு.. பேரிடியை இறக்கும் டெல்லி

MKSTALIN,THIRUPARANKUNDRAM
MKSTALIN,THIRUPARANKUNDRAM

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தேசிய அளவில் உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான். ஹிந்து கோவில்களை காக்க வேண்டிய ஹிந்து அறநிலையத் துறையோ, தீபத் துாணில் தீபம் ஏற்ற மறுத்து, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.ஹிந்துக்களின் உண்டியல் பணத்தில்  ஹிந்து அறநிலையத் துறை நடத்தும் அரசு, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்க்கிறது.ஏன் மாசூதிகள் மற்றும் சர்ச் சொத்துக்களை தமிழக அரசு கையில் எடுக்கவில்லை என்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. 


தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு, பெரும்பான்மை மக்களின் மத உணர்வை காயப்படுத்துகிறதா இந்த தி.மு.க., அரசு. என்ற கேள்விகள் எழுந்துள்ளது.  இத்தீர்ப்பை எந்த இஸ்லாமியரும் எதிர்க்கவில்லை; ஆனாலும், ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது தி.மு.க.  தற்போது இந்து மக்களிடம் தீபத்தூண் விவகாரம் மனதில் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. ஒரு வேளை தேர்தல் நேரத்தில், ஹிந்துக்கள் ஓட்டு வங்கி என்று ஒன்று உருவானதாக தெரிந்து விட்டால், பெரும்பான்மை ஓட்டுகளை அறுவடை செய்ய, சிறுபான்மையினரை துாக்கி அடிக்க கூட  தயங்க மாட்டார்கள்  என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 

இதற்கிடையில் தான் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மீண்டும் புகார் கூறியுள்ளது, அமலாக்கத் துறை. இதனால், தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அத்துறையின் அமைச்சரான நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு, குரல் எழுந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் புகார் எழவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். மணல் கொள்ளை விவகாரத்தில் ஒரு கொலையே நடந்தும், 'வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று மனு போடும் இந்த அரசு, வெறும் ஊழல் குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடர்ந்திடுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. 

தமிழகம் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமடைந்துள்ளது. தினம் தோறும் கொலை பாலியல் பலாத்கார சம்பவங்கள் என அரங்கேறி வருகிறது. போதை பழக்கம் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. நெல்லை பக்கம் சென்றால் சாதீய பிரச்சனைகள் பள்ளி வரை சென்றுள்ளது. திமுக அமைச்சர்கள் தினம் தோறும் ஊழல் புகாரில் சிக்கி வருகிறார்கள், கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,கள்ளச்சாராயம் ஆறாக ஓடி மக்கள் உயிர்களை பலி வாங்கியுள்ளது,   திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிவால்,

கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 7,758 கொலைகள் நடந்துள்ளன என தகவல்கள் கூறியுள்ளது!

கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை, இதுபோல் திமுக அரசு மீது மக்கள் குறிப்பாக பெண்கள் அதிருப்தியில் உள்ளார்கள். எப்படியாவது திமுக 3 ஆம் தலைமுறை  உதயநிதியை முதல்வராக்க முடிவு செய்து திமுக மீதான அதிருப்தியை இந்து  முஸ்லீம் என பிரித்துவிடலாம் மேலும் ஊழல் குற்றசாட்டுகளை மறைக்க நீதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் கொண்டுவந்துள்ளாரகள். இந்த திருப்பரங்குன்றம் விஷயத்தை தேர்தல் வரை கொண்டு போவார்கள் என்பதில் சந்தேக மில்லை. இதற்கு காரணம் இந்துக்கள் ஒன்றிணையதது தான். இந்த நிலையை திமுகவே மாற்றும் நிலை உருவாகி உள்ளது.மேலும்  திருப்பரங்குன்றம் விஷயமே திமுகவை தோற்கடிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது எனவே இதை  தொடர வேண்டாம் என  திமுக முக்கிய அமைச்சர்கள் ஸ்டாலினிடம் படித்து படித்து கூறியும் ஸ்டாலின் கேட்கவில்லையாம். மேலும் டெல்லியை தேவையில்லாமல் சீண்டி எங்களை மாட்டிவிடுகிறீர்கள் இந்த 6 மாத காலத்தில் எத்தனை அமைச்சர்கள் நீதிமன்ற வாசலில் நிற்கபோகிறார்களோ என புலம்பி உள்ளார்கள் திமுக  சீனியர்ஸ்.