24 special

பொங்கலுக்கு நாம கவர்னர் மாளிகைக்கு போக வேண்டாம் ப்ளீஸ் தலைவரே.. கண்டிப்பா ட்விஸ்ட் வெச்சிருப்பாரு ஆளுநர்!

RN Ravi
RN Ravi

தமிழக சட்ட சபையில் ஆளுநரை அமர வைத்து திமுக உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நிகழ்த்திய மரபு மீறல் விவாகரம் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ள நிலையில் ஆளுநர் மாளிகை பல்வேறு வழிகளில் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.


அதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்றைய தினம் நடந்த நிகழ்வு குறித்து இரவோடு இரவாக முழு தகவலையும் வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநர் மாளிகை அனுப்பி இருக்கிறது என்கின்றன ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.

இது ஒருபுறம் என்றால் ஆளுநர் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய அழைப்பிதழில் தமிழகம் என பயன்படுத்திய வாசகம் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது,  வரும் 12ம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில், பங்கேற்க வரும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில், தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்ததுடன், 'தமிழக ஆளுநர் ' என குறிப்பிட்டு, தமிழக அரசின் லட்சினையையும் தவிர்த்துள்ளார்.

ஆனால், இந்திய அரசின் லட்சினை இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது, அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்தி இருந்த நிலையில் தற்போது தமிழக ஆளுநர் என பயன்படுத்தி இருபது திமுகவினர் மத்தியில் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.

நேற்றைய தினம் சட்டசபையில் கூறியது போதாது என இப்போது பொங்கல் விழாவிலும் ஆளுநர் பஞ்சாயத்து கூட்ட பார்க்கிறார், விழாவை புறக்கணிப்பதே சரியாக இருக்கும் என ஆளுநர் மாளிகைக்கு செல்லவேண்டாம் அங்கு அவர் ஏதாவது நமக்கு ட்விஸ்ட் வைத்து இருப்பார் என மூத்த அமைச்சர்கள் இப்போதே முதல்வர் ஸ்டாலினிடம் வழியிறுத்த தொடங்கி விட்டார்களாம். மொத்தத்தில் ஆளுநரின் அடுத்தடுத்த நடவடிக்கை என்னவழியில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறதோ என அச்சத்தில் இருக்கிறார்களாம் பல அமைச்சர்கள்.