24 special

திறனற்ற திமுகவுக்கு இது ஒண்ணு தான் கொறைச்சல்... போட்டு பொளந்து தள்ளிய வானதி !

stalin , vanathi Seenivasan
stalin , vanathi Seenivasan

2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் நடைபெற்றது.சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் பொறுத்தவரை மரபுப்படி ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் வணக்கம் எனக்கூறியதுமே, 'தமிழ்நாடு வாழ்க', 'எங்கள் நாடு தமிழ்நாடு' என முழுக்கமிட்டு ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.  


தமிழ்நாடு மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமிட்டவாறே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அழகு தமிழில் உரையை ஆரம்பித்து, பாரதியார் பாடலுடன் உரையை செம்மையாக முடித்திருந்தார். 

ஆனால் வேண்டுமென்றே ஆளுநரை அவமதிக்க காத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவையில் இருக்கும் போதே சட்டமன்ற மரபை மீறி, ஆளுநரை கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை என்றும், அதனை அவர் வாசிக்காமல் அரசு தயாரித்துக் கொடுத்த உரையே அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார். 

இதில் உண்மை என்னவென்றால் ஆளும் கட்சியினர் தயாரித்துக் கொடுக்கும் உரையை அப்படியே வாசிக்க வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் ஆளுநருக்கு கிடையாது. உரையில் மாநில அரசு ஓவராக பில்டப் செய்தோ அல்லது சட்டத்திற்கு புறம்பானதையோ ஆளுநர் உரையில் இணைத்திருந்தால் அதனை புறந்தள்ளும் உரிமை ஆளுநருக்கு உண்டு. இதையெல்லாம் அறிந்திருக்கும் ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்றைய சட்டப்பேரவையில் திமுக அரசு அரங்கேற்றிய நாடகத்தை, பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் உரை தயார் செய்யப்பட்டுள்ளது என்றும், எதையெல்லாம் ஆளுங்கட்சி எழுதிக்கொடுக்கிறதோ அதை படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் ஆளுநருக்கு உரிமை உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் பொளத்து கட்டியுள்ளார். 

ஆளுநர் உரை மூலமாக திமுக தனது சித்தாந்தங்களை திணிக்க வேண்டும் என முயற்சிப்பது சரியல்ல எனக் கண்டித்த வானதி ஸ்ரீனிவாசன், ஆளுநரிடம் திமுக தனது அதிகாரத்தைக் காட்ட முயற்சிப்பதையும் சுட்டிகாட்டியுள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினர் கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றசாட்டிய வானதி ஸ்ரீனிவாசன், அரசின் செயலற்ற தன்மை மற்றும் வாரிசு அரசியலை மறைக்கவே இப்படி செய்துள்ளதாக சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.