24 special

"மலை அண்ணாமலை" திருமாவிற்கு வந்த போன் கால்.. கட்சியினர் செல்லவேண்டாம் என அறிவித்த பின்னணி..!

Thirumavalan
Thirumavalan

தமிழகத்தில் எந்த பாஜக தலைவருக்கும் முன் எப்போதும் இல்லாத ஊடக வெளிச்சம், சமூக வலைத்தள ஆதரவு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னேறி வருகிறார், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அம்மாநில பாஜக தலைவர் மிக பெரிய அளவில் மாநிலம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார், இந்த பயணத்தின் ஒரு கூட்டத்தில் அண்ணாமலை சென்று நேரடியாக உரையாற்றினார்.


அண்ணாமலைக்கு சிங்கம் அண்ணாமலை என "தெலுங்கானா மாநில"  பாஜகவினர் பெரும் வரவேற்பு அளித்தனர், மொத்தத்தில் அண்ணாமலை தமிழகத்தை தாண்டி தடம் பதித்த பாஜக தலைவராக வலம்வந்து கொண்டு இருக்கிறார், இது ஒருபுறம் என்றால் அண்ணாமலையின் மற்ற செயல்பாடுகள் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எந்த கட்சி தலைவரும் தமிழகத்தில் ஒரே மேடையில் விவாதத்திற்கு பங்கேற்றது கிடையாது, ஒன்று அவர்கள் லெவலிற்கு நான் இறங்கி பதில் சொல்ல வேண்டுமா ? என்ற கேள்வியுடன் கடந்து செல்வர், அதே போன்றுதான் அண்ணாமலை அம்பேத்கர் குறித்து விவாதிப்போம் என அழைத்த போது திருமாவளவன் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர் அவருடன் விவாதம் நடத்த ஒரு சப் ஜூனியரை அனுப்புகிறேன் என்று அறிவித்தார்.

அதே போல் விசிகவை சேர்ந்த சங்க தமிழன் என்பவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு உங்களோடு விவாதம் செய்ய நான் தயார், எப்போது கமலாலயம் வரவேண்டும் என கேள்வி எழுப்பினார் அதற்கு அண்ணாமலை 26 ம் தேதி கமலாலயம் வரலாம் என தெரிவித்து இருந்தார், இந்த சூழலில் சங்க தமிழன் குழுவினர் கமலாலயம் செல்ல தயாரான நேரத்தில் திருமாவளவனிடம் இருந்து அழைப்பு வந்து இருக்கிறது.

யாரும் கமலாலயம் செல்ல வேண்டாம் என தெரிவித்து இருக்கிறார், இதனை திருமாவளவனே ட்விட்டரிலும் தெரிவித்து இருக்கிறார், ஏன் திடீர் என விசிக பின்வாங்க வேண்டும் என அனைவரும் சந்தேகத்தில் இருக்கின்றனர், இந்நிலையில் அதற்கான காரணங்கள் தற்போது கசிந்துள்ளது.

விசிகவினர் கமலாலயம் வரும் போது சிறப்பாக நல்ல முறையில் வரவேற்று அவர்களுக்கு விருந்து பரிமாறி, அவர்களுடன் நேர்மையாக விவாதம் நடத்த அண்ணாமலை தயாராகி இருக்கிறார் அத்துடன் விவாதத்தை நேரலை செய்யவும் அவரது அட்மின் குழுவினர் தயாராக இருந்துள்ளனர், அதே நேரத்தில் விவாதம் முடிந்தவுடன் வந்திருந்த விசிகவினரை தனது காரில் ஏற்றி கொண்டு நேராக திருமாவளவனை விவாதத்திற்கு அழைத்து நேருக்கு நேர் விவாதம் நடத்த அண்ணாமலை தயாராக இருந்தாராம்.

இது எப்படியோ உளவு அமைப்புகள் கண்டறிந்து இது போன்ற சம்பவம் நடந்தால் அது அண்ணாமலையின் புகழை சாமானிய மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் மேலும் விசிகவிற்கு எதிர் மனநிலையில் உள்ள மக்கள் மத்தியில் அண்ணாமலை பெரும் மதிப்பு மிக்க மனிதராக மாற்ற படுவார் எனவே உடனே இந்த சந்திப்பை விசிக தவிர்க்க வேண்டும் என ஆளும் கட்சிக்கு அறிவுறுத்தி இருக்கிறதாம்.

அவர்களும் நேரடியாக திருமாவளவனை தொடர்பு கொண்டு விவரத்தை கூற உடனடியாக சந்திப்பை ரத்து செய்து இருக்கிறாராம் திருமாவளவன்.