
ஆப்ரேஷன் சிந்துக்கு அடுத்து உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி உள்ளது குறிப்பாக இந்தியா பாகிஸ்தானை என்ன செய்தது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளன உலக நாடுகள். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டன இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து ஒரு மிகப்பெரிய விஷயம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது, இந்த தகவல் உலக நாடுகளுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது மேலும் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களுக்கு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் இந்தியாவின் பொருளாதாரக் குறித்தும் உலக நாடுகள் ஆலோசித்து வருகின்றனர் இதில் அமெரிக்கா சற்று கதிகலங்கி போய் தான் உள்ளது ஏனென்றால் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் அபரிபிதமாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் போர் சூழலால் தங்களின் பொருளாதாரத்தை இழந்து வரும் நிலையில் பல துரோகி நாடுகளை அருகில் வைத்துக் கொண்டு இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பலமாக நகர்ந்து வருகிறது. பாகிஸ்தான் உடன் சண்டை ஏற்பட்ட போதும் இந்தியாவின் பங்குச் சந்தைகள் விழவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனால் உலக வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா தற்போது உள்ளது
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரில் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்கியது. இருப்பினும், அதைப் பொறுக்காத பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்தியா ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்த நிலையில், இந்தியாவின் பதிலடியில் 64 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ தளங்கள், ஏர் பேஸ்கள் என முக்கியமான இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இரு தரப்பு மோதல் முடிவுக்கு வந்து சுமார் 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாகக் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 64 பாகிஸ்தான் வீரர்கள் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்தாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் எடுத்த பதிலடி நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
அதாவது எல்லை மீறி இந்தியப் பகுதிகளில் எல்லையோரம் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியா வீரர்கள் கொடுத்த பதிலடியில் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது 90க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவம் குறிப்பிட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது. இருப்பினும், உண்மையில் அதை விட கிட்டதட்ட ஆறு மடங்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.
இந்தியா முதலில் ஆபரேஷன் சிந்தூரை நடத்திய போது, பாகிஸ்தானில் குடியிருப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் மீது இந்தியா எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை. சரியாகத் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் திட்டமிட்டு துல்லியமாக இந்த தாக்குதலை நடத்தியிருந்தது.இந்தியா முக்கியமான ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் இந்தியத் தாக்குதலால் நிலைகுலைந்து போய் மோதலை முடிவுக்கு வர அழைப்பு விடுத்தது, இதனால் பாகிஸ்தானின் கதையை முடித்துள்ளது இந்தியா.