
போக்குவரத்து துறையில் உள்ள ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என்பதில் உறுதியாக உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த போக்குவரத்து ஊழியர்கள் வரும் 9ம் தேதி போராட்டம் அறிவிப்பதாக கடந்த வாரம் முதல் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஒட்டு மொத தமிழகத்தில் உள்ள மக்களுக்கும் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆனால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து போக்குவரத்து சங்கங்கள் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அவ்வப்போது போராடட்ம நடத்தி வந்தனர். அப்போது எதிர்கட்சியாக இருந்த ஸ்டாலின் போக்குவரத்துக்கு ஊழியர்களிடம் நேரகா சென்று எங்களது ஆட்சியில் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என ஸ்டாலின் களத்தில் நின்று சபதம் கொடுத்து வந்தார். அதுபோலவே திமுகவும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது இது வரை அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந் திமுக அரசு. இந்நிலையில் பல முறை போராட்டம் நடத்திய போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களை சமாதான படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது தங்களது கோரிக்கைக்கு நிரந்தர தீர்ப்பு வேண்டி நாளை முதல் போட்டாராம் நடைபெறும் என முன்கூட்டிய தெரிவித்தனர்.
ஆனால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போராட்டம் நடைபெற்றாலும் பேருந்துகள் இயக்கப்படும் என கூறுகிறார். மேலும், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம் என தெரிவித்து வருகிறார். இது சாத்தியமில்லை என போக்குவரத்து ஊழியர்கள் கலவரையறையற்ற போரட்டம் நடத்தவுள்ளனர். பொங்கல் நெருங்கி வரும் இந்த வேலையில் போராட்டம் அறிவித்திருப்பது மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒருநாள் பண்டிகை என்றால் கூட மக்கள் ஊருக்கு செல்லாமல் இருப்பார்கள் ஆனால், பொங்கல் என்பது 4 நாட்கள் நடைபெறும் பண்டிகை என்பதனால் மக்களுக்கு சிரமம் ஏற்படகூடிடும் என்பதை நினைவில் கொள்ளாமல் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அமைச்சர் கூறுவது நியமற்றது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
போக்குவரத்து சேவை முடங்கினால் அரசு எந்த மாதிரியான விளைவுகளை சந்திக்கும் என்பதை தெரிந்து தான் அவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருகிறார்களா என கேள்வி எழுந்து வருகிறது. இவர்கள் மீது அரசு தீர்வு கொடுக்காமல் கேலோ இந்திய விளையாட்டு போட்டி, கார் ரேஸ் விடுவதில் கவனமா செலுத்துகிறது. மேலும், போராட்டம் நடத்தட்டும் தீர்வு எட்டவில்லை என்றால் போக்குவரத்துத்துறையை அரசு தனியார் மையமாக்க திட்டம் தீட்டி வருவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே இந்த திட்டத்தை பற்றி அறிவித்ததும் பல தரப்பில் இருந்து கண்டனம் வந்தது. முன்னதாக ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் என தொடர்கதையாகி விட்டன. அப்போதும் இது மீது நடவடிக்கை எடுக்காமல் அரசசு வேடிக்கை பார்த்து வருவதாக குற்றசாட்டு வந்துள்ளன.
தமிழக அரசு பொங்கலுக்கு சிறப்பு பரிசு உடன் போக்குவரத்துக்கு இயங்காது என்ற பரிசும் அறிவித்தார் மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எதற்காக வேடிக்கை பார்க்கிறது இந்த சூழ்நிலையுடன் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றால் எப்படி சமாளிக்க போகிறார். என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.