24 special

முனுசாமி கொடுத்த பேட்டி EPS கேஃம் ஓவர்...! பற்ற வச்சுட்டிங்களே பரட்டை!

Munusamy, edappadi palanisamy
Munusamy, edappadi palanisamy

தமிழக அரசியலில் ஒரு தலைவர் தன் பலத்தை நிரூபிப்பது என்பது ஆட்சியை இழந்த பிறகு கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதில் இருந்தே நிரூபிக்க முடியும் அந்த வகையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே நடைபெறும் சட்ட போராட்டம் மாறி மாறி இருவருக்கும் வெற்றி தோல்வியை கொடுத்து வருகிறது.


நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர், எனினும் EPS தரப்பிற்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை, பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு சென்றால் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எதிராக வரவே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால் இதுநாள் வரை பாஜக நேரடியாக OPS தரப்பிற்கோ அல்லது EPS தரப்பிற்கோ இதுவரை எந்த வித உதவியும் செய்தது இல்லை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செதியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கூட அது அதிமுக உட்கட்சி விவகாரம் அதனை அக்கட்சி தலைவர்கள் தொண்டர்கள் பார்த்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த போது கூட EPS, OPS என இருவரையும் சந்தித்து சென்றார், இந்த சூழலில் பாஜகவை வம்பு இழுக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி இருப்பது பாஜகவை கொந்தளிக்க செய்துள்ளது, சில நாட்களுக்கு முன்னர் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி கைகளில் சென்றால் அது தங்களுக்கு எதிராக அமையும் எனவும் அதிமுகவில் சர்ச்சைகள் உண்டானால் அதனை சாதமாக பயன்படுத்த ஒரு சில கட்சிகள் முயல்கிறது என்றும் அதற்கு ஆளும் கட்சியான திமுகவும் துணை போவதாக குறிப்பிட்டு இருந்தார்.

கே. பி. முனுசாமி நேரடியாக பாஜகவை  சொல்லவில்லை என்றாலும் அவர் குறிப்பிட்டது பாஜகவைதான் என அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்து இருக்கும், பாஜக தரப்பில் இதுவரை எங்குமே எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யவில்லை மாறாக முனுசாமி தொடர்ச்சியாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கு முன்னர் திமுக அதிமுக பங்காளிகள் என்றும் குறிப்பிட்டு இருந்தார், முனுசாமியின் இந்த பேச்சு பாஜகவினர் இடையே சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பாஜக குறித்து எந்த விமர்சனமும் செய்யவேண்டாம் என தனது தரப்பை சேர்ந்த முன்னணி தலைவர்களிடம் சொல்லி இருக்கிறாராம்.

அப்படி இருந்தும் எடப்பாடி பழனிசாமி பேச்சை மதிக்காமல் தொடர்ச்சியாக முனுசாமி பேசி வருவது, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக அதிருப்தி அடைய காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது, மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்தே முனுசாமி எடப்பாடியை அரசியல் வட்டாரத்தில் காலி செய்து விடுவார் என்று பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி தெரிவித்து இருந்தது தற்போது ஏற தால உறுதியாகி இருக்கிறது.

மொத்தத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எடப்பாடி பழனிசாமி நியமனத்தை அங்கீகரிக்காத சூழலில் முனுசாமி போன்றவர்களின் பாஜக எதிர்ப்பு எடப்பாடி பழனிசாமியை பின்னோக்கி தள்ளிவிடும் வகையில் அமைந்து இருப்பதால் EPS மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறாராம்.