24 special

திருட்டு திமுக ஆட்சி பற்றி மோடி சொன்னது உண்மைதான்.... முன்னாள் ஐஜி ஆதங்கம்...

mk stalin
mk stalin

தமிழ்நாட்டில் இந்து கோவில்களை திமுக அரசு அகரமித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடு சில தினங்களுக்கு முன் தெலுங்கானாவில் நடைப்பெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், சனாதனத்தை எதிர்க்கும் தமிழக அரசு, எதற்காக இந்து கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? என்றும் கேள்வியெழுப்பினார் மேலும், இந்து கோயில்களை போல சிறுபான்மையினர் வழிபடும் கோயில்களை தமிழக அரசால் கட்டுப்பாட்டில் எடுக்க முடியுமா? என்றும் ஆவேசமாக கேட்டார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் இன்று சிலை தடுப்பு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் திருப்பூரில் உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல் 


இப்போ இருக்கக்கூடிய முதலமைச்சருக்கு நேர்மை என்பது பற்றி தெரியுமா? சைவர்கள், வைணவர்களின் இந்து கோவில்களின் சொத்துக்கள், காசுகளை எடுத்து சமூகத்திற்கு கொடுக்கின்றனர். ஏன் மற்ற இயக்கத்தில் இருந்து காசுகளை எடுத்து செலவு செய்வது இல்லை என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை தான் பிரதமர் மோடி வேறு மாநிலத்தில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் பேசினார். தொடர்ந்து பேசிய பொன். மாணிக்கவேல் தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருவது 100 சதவீதம் உண்மை தான், தமிழ் நாடு அரசு வலுக்கட்டாயமாக கோவில்களை கையில் வைத்திருக்கிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.பிரதமர் மோடி கூறியது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபிப்பாரானால் என்னுடன் விவாதத்திற்கு தயாரா. மு.க.ஸ்டாலின் சொல்வது 100 சதவீதம் பொய். நான் சொல்வது பொய் என்றால் இன்று இரவுக்குள் உயிர் இழந்து விடுவேன். நான் ஒரு சாதாரண மனிதன் என்னை கூப்பிடுங்கள் கோவில் சம்பந்தமாக விவாதிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சவால் விட்டார்.

தமிழ்நாட்டில் இருக்க கூடிய கோவில்களை திராவிடம் இயக்கம் காட்டியதா? இல்லை அதிமுக அரசு காட்டியதா? 800 வருடத்திற்கு முன் நம் முன்னோர்கள் கட்டினார்கள் இப்படியான கோவில்களை புதுப்பிக்காமல், டேனிஷ் கோட்டை தாரங்கமாடியில் இருக்கின்ற கோட்டைக்கு வளாகம் புதுப்பிக்க 4 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து பல கோவில்களில் சிலை கடத்தப்பட்டு இருக்கின்றன. நான் பணியில் இருக்குபோது தனை மீட்க FIR  போட்டு இருக்கேன் அதையெல்லம் மீட்காமல் முதலமைச்சர் ஸ்டாலின், பிறர் கூறுவதற்கு வெட்கமே இல்லாமல் அவர் கூறுவது முற்றிலும் தவறு என்று பதில் அளிப்பார். பணியில் இருக்கும்போது கடுமையாக உண்மையாக உழைத்தேன். இப்போதும் உழைத்து கொண்டிருக்கிறேன். கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் எந்த அரசியல் கட்சி சேர்ந்தவரும் கிடையாது.  லட்சக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை சாப்பிட்டுட்டாங்க நிச்சயம் இதெற்கெல்லாம் பதில் வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை நிச்சயம் போராடுவேன் இதன் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்று கூறினார்.