24 special

9 மாதத்தில் டீல் முடித்த மோடி… உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்று ஒப்பந்தம்! சின்னாபின்னமாகும் அமெரிக்கா

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

சமீப காலமாக வரி விதிப்பு, வர்த்தக கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு மறைமுக அழுத்தங்களை கொடுத்து வருகிறது. “எங்களை நம்புங்கள்” என்று சொல்லிக்கொண்டே, தனது சொந்த வர்த்தக விதிகளை மற்ற நாடுகளுக்கு திணிப்பது தான் அமெரிக்காவின் பழக்கம். இதை பிரதமர் மோடி நன்றாகவே புரிந்து கொண்டார். அதனால் தான், “ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பி இந்தியாவின் எதிர்காலத்தை கட்டுப்படுத்த முடியாது” என்ற உறுதியான முடிவை இந்தியா எடுத்துள்ளது. அதன் விளைவாகவே, உலகின் பல நாடுகளுடன் சமநிலையான, நியாயமான வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா வேகமாக முன்னெடுத்து வருகிறது.


அந்த வரிசையில், தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிக முக்கியமானது. இது இன்று திடீரென உருவான ஒப்பந்தம் அல்ல. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஒப்பந்தம். ஆனால் அதை செயலில் மாற்றியவர் மோடி தான். கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியாவுக்கு வந்தபோது இந்த ஒப்பந்தம் குறித்து முதன்முறையாக தீவிரமாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு வெறும் 9 மாதங்களுக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறார்கள் என்றால், அது மோடி அரசின் நிர்வாக வேகம் மற்றும் அரசியல் உறுதியை காட்டுகிறது. இன்று பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமரும் தொலைபேசியில் நேரடியாக பேசி, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பலன் முதலீடு. அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்து இந்தியாவில் சுமார் 1.79 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் இந்தியா – நியூசிலாந்து வர்த்தகம் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நியூசிலாந்து நாட்டின் பொருட்கள் இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும். இதன் மூலம் போட்டி அதிகரித்து, விலைகள் குறையும். இது நேரடியாக இந்திய பொதுமக்களுக்கு பயன் தரும்.

அதே நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் நியூசிலாந்திலும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும். இதனால் “மேக் இன் இந்தியா” மற்றும் “வோக்கல் ஃபார் லோக்கல்” கொள்கைகளுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும். இதனால்தான் இந்த ஒப்பந்தத்தை ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்று சொல்லலாம்.

இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு முக்கிய அம்சம், உலக அரசியலுடன் தொடர்புடையது. Five Eyes எனப்படும் அமைப்பு அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்த உளவு மற்றும் பாதுகாப்பு கூட்டணி ஆகும் . அந்த கூட்டணியில் உள்ள ஒரு நாட்டுடன் இந்தியா இப்படி வலுவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியிருப்பது, உலக  நாடுகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது.   இது மோடியின் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் இரு நாடுகளும் ஒன்றாக செயல்பட முடிவு செய்துள்ளன. பொருளாதாரம் மட்டுமல்ல, பாதுகாப்பு, விளையாட்டு, கல்வி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளும் இந்த ஒப்பந்தம் மூலம் வலுப்பெறும்.

மொத்தத்தில், இது வெறும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் அல்ல. இந்தியாவின் பொருளாதார சுயமரியாதையை உலகுக்கு எடுத்துச் சொல்கிற ஒப்பந்தம். அமெரிக்காவை மட்டும் நம்பாமல், உலகத்தை சமநிலையாக அணுகும் மோடியின் தொலைநோக்கு அரசியலின் இன்னொரு பெரிய வெற்றி என்றே இதை சொல்ல வேண்டும்.