24 special

நேரலையில் "ஒரே கேள்வி" கோட் சூட் சரவணன் விசிக விக்ரமன் இருவரும் பேந்த பேந்த முழித்த சம்பவம்!


தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் அரசியல் ரீதியாக விமர்சனம் வைத்த நிலையில் இது நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சையை உண்டாக்கியது இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த தகவல் முற்றிலும் பொய்யானது என பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவே பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி கடுமையான பதிலடியை கொடுத்தார்.


நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மோடி முன்னிலையில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார். சில வரிகளை ஆங்கிலத்தில் பேசும் போதும், ' இண்டியன் யூனியன்' என்றே குறிப்பிட்டார். தமிழகம் முன்னேறியதற்கு ‛‛திராவிட மாடல் ஆட்சி தான் காரணம்'' என்றும் பேசினார்.

சென்னை நேரு உள்விளையாடு அரங்கில் நேற்று நடந்த ரூ 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்ட பணிகள் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், தமிழக கவர்னர் என்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் நிடின் கட்கரி உள்ளிட்டோரும் காணொளி வழியாக கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம். தோல் பொருள் ஏற்றுமதியில்18 சதவீதம். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கார்களில் தமிழகத்தின் பங்கு 32.5 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்கு முக்கியமானது. மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 1.21சதவீதம் தான். தமிழகத்தின் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 14 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைதார் ஸ்டாலின்.

இது குறித்து தனியார் ஊடகத்தில் விவாதம் நடைபெற்றது விவாதத்தில் பங்கேற்ற பாஜக பிரமுகர் பாஜக ஆட்சியில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியல் போட்டார், தொடர்ச்சியாக நல திட்டங்களை அடுக்கி கொண்டே சென்றார், அதன் பிறகு எங்கே காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு செய்யப்பட்ட திட்டங்கள் ஏதேனும் ஒரு 5 பட்டியல் போடுங்கள் என தெரிவித்தார். அவ்வளவுதான் விசிக விக்ரமனும், திமுக சரவணனும் பேந்த பேந்த முழிக்க கலந்து கொண்ட பங்கேற்பளார்கள் சிரிக்கும் நிலை தான் உண்டானது.இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது கீழே இணைக்கப்பட்டுள்ளது.