24 special

அடுத்த தேர்தலில் ஸ்வீப் பண்ணிடுவோம்..! பாஜகவின் அமர் பிரசாத் அதகளம்..!

Amar prasad reddy
Amar prasad reddy

அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் பாஜக தான் வெற்றி பெறும் என பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி உறுதிப்பட  தெரிவித்துள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


ஒரு நேர்காணலுக்கு பேட்டி கொடுக்கும்போது, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அமர் பிரசாத் அவர்களிடம் நெறியாளர், "எந்த தைரியத்தில் நீங்கள் எதிர்க்கட்சி என சொல்கிறீர்கள்? எப்படி வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையில் உள்ளீர்கள்?  என கேள்வி கேட்க...

நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் பாஜக தான் வெற்றி பெறும். திமுகவை முழுவதுமாக ஸ்வீப் பண்ணிடுவோம் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கடந்து சில நாட்களாக பெரும் வைரலாக பரவி வந்தது.



மேலும் கூடுதலாக, இளைஞர்கள் பாஜக பக்கம் இருக்கின்றார்கள் நாங்கள் இளைஞருக்கு என்ன வேண்டுமோ அதை தான் செய்து கொண்டு இருக்கிறோம். இன்றைய இளைஞர்கள் நாட்டை காப்பாற்றும் முனைப்பில் இருக்காங்க. தொழில்நுட்ப ரீதியாகவும் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள்.

இளைஞர்கள் பாஜக பக்கம் இருக்கின்றார்கள். பாஜகவும் இளைஞர்கள் பக்கம் இருக்கின்றது. எங்கள் தலைவர் அண்ணாமலை எங்கு சென்றாலும் அவருடைய பேச்சைக் கேட்பதற்கு ஓடோடி வருகிறார்கள். அவரது செயலை புகழ்ந்து பேசுகிறார்கள். திமுக வை பொறுத்தவரை இளைஞர்களை குடிக்க வைக்க பழக்கி விடும் கட்சியாக தான்  இருக்கிறது.

இளைஞர்கள் வேறு எதையும் சிந்திக்க கூட முடியாத அளவுக்கு அவர்களை வைத்திருக்கும்  வேண்டும் என நினைக்கிறது. ஆனால் பாஜக அதற்கெல்லாம் இடம் கொடுக்காது இளைஞர்களின் கையில் தான் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. இப்போது கூட அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் சேர்வதால்  உலகிலேயே மிக பெரிய வலிமை வாய்ந்த ஆர்மி கொண்டதாக இந்தியா இருக்குமென்றும் கூறினார். 

மேலும், எங்கள் கட்சியை பொறுத்த வரையில், தொண்டருக்கு ஏதாவது என்றால் எங்களது மாநில தலைவர் ஓடோடி வந்து நிற்பார். எங்கள் தலைவரே நேரில் வரும்போது நாங்கள் விட்டுவிடுவோமா எங்களுடைய தொண்டருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாய் வீட்டிற்கு சென்று பார்ப்போம். அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுப்போம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் நாங்களே பார்த்துக் கொள்வோம் என பெருமையாக குறிப்பிட்டார் அமர் பிரசாத் ரெட்டி.