24 special

கோவிலா மசூதியா? வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

Temple and masudhi
Temple and masudhi

வாரணாசி :  முகலாயப்படையெடுப்பில் இந்திய தேசத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பாரத தேசத்தின் ஆயிரக்கணக்கான கோவில்கள் தரைமட்டாக்கப்பட்டு அதன்மீது மசூதிகள் எழுப்பப்பட்டன. மேலும் பலர் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்று வரலாற்று புத்தகங்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி ஹிந்துக்கோவில்களை இடித்து கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மேலும் அதுதொடர்பான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கியான்வாபி மசூதியில் கிழக்குப்புற வாசலில் அமைந்துள்ள தெய்வமான ஸ்ருங்கர் கௌரியை வழிபட மற்றும் சடங்குகள் பூஜைகள் செய்ய வழக்கு தொடுக்கப்பட்டது.



டில்லியை சேர்ந்த ராக்கி சிங், லட்சுமி,ரேகா பதக் மஞ்சுவியாஸ் ஆகியோர் கியான்வாபி மசூதியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ஹனுமான், நந்தி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட மற்றும் பூஜைகள் செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஏப்ரல் 18 அன்று அஜய்குமார் என்பவரை கண்காணிப்பு வழக்கறிஞராக நியமித்தது.

மேலும் வெளிப்புறச்சுவரில் விநாயகர், ஹனுமான்,சிருங்கார கௌரி தெய்வங்களுக்கு பூஜை செய்வதை உறுதிப்படுத்துமாறும் தேவைப்பட்டால் வீடியோ பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டனர். மேலும் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையை அணுகுமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து கண்காணிப்பு வழக்கறிஞர் மே 6 மற்றும் 7 அன்று மசூதிக்கு வரவிருப்பதாக மசூதி நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.



இந்நிலையில் கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் இன்டெஜாமியா மஸ்ஜித் இணைச்செயலாளர் ஸ்.எம்.யாசின் கூறுகையில் " வீடியோக்ராபி மற்றும் சர்வே எடுப்பதற்கு யாரையும் நாங்கள் மசூதி வளாகத்திற்குள் அனுமதிக்கமாட்டோம். வீடியோ மற்றும் எந்த ஒரு ஆய்வுக்காக அணுகும் எந்தவொரு முறையும் மசூதி நிர்வாகத்தின் நெறிமுறைக்கு புறம்பானது. இதனால் ஏற்படும் பின் விளைவுகளை சந்திக்க தயாராக உள்ளோம்" என கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 10 அன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. அந்த தேதியில் வீடியோ மற்றும் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மசூதி நிர்வாகம் அனுமதிமறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.