Tamilnadu

அரை பூசணிக்காயை முகநூலில் மறைத்த ஜோதிமணி எம்.பி! முக்கியமானதை சொல்லவில்லையே!

jyotimani
jyotimani

தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, ஹிமாச்சல பிரதேசத்தின் மந்தி, மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அசாமில் 5, மேற்குவங்கம் 4, மத்தியப் பிரதேசம் 3, ஹிமாச்சல் பிரதேசம் 3, மேகாலயா 3, பிகார் 2, கர்நாடகா 2, ராஜஸ்தான் 2, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்து, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தனது முகநூல் பக்கத்தில்  கருத்து தெரிவித்து இருந்தார், அதில் :நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இமாசலபிரதேசம்,ராஜஸ்தான்,மத்தியப்பிரதேசம் ,கர்நாடகாவில் பாஜகவிடருந்த 10 தொகுதிகளில் 8 ஐ காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பல தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. மக்கள் விரோத மோடிஅரசை  மக்கள் துணையோடு காங்கிரஸ் கட்சி வீழ்த்தும் எனக்குறிப்பிட்டு இருந்தார் ஜோதிமணி.

ஆனால் ஜோதிமணி பாதி உண்மையை மட்டும் சொல்லிவிட்டு மீதியை மறைத்துவிட்டதாக பாஜகவினர் அவரது முகநூல் பக்கத்திலேயே பதில் தெரிவித்து வருகின்றனர், குறிப்பாக தெலுங்கனா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான சந்திரசேகரராவ் கட்சியையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியையும் பாஜக வீழ்த்து வெற்றி பெற்ற முக்கிய விஷயத்தை ஜோதிமணி ஏன் சொல்லவில்லை என பாஜகவினர் எதிர் கேள்விகளால் நையபுடைத்து வருகின்றனர்.

மேலும் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் 8 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் 4 இடங்களிலும் இதர கட்சிகள் மீதமுள்ள இடங்களில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன, அசாம் மாநிலத்தில் 5 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது, இவற்றை எல்லாம் மறைத்து வெற்றி வெற்றி என கூவி கொண்டு இருக்கிறார் ஜோதிமணி என பாஜகவினர் பதிலடிக்கொடுத்து வருகின்றனர்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தால் முடியாது என அரை பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் ஜோதிமணி என உண்மையை சொல்லி பதிலடி கொடுத்துவருகின்றனர் பாஜகவினர்.