24 special

ட்ரெண்ட் மாறுகிறதா? மீண்டும் எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை..! என்ன நடக்க போகிறது?

stallin and annamalai
stallin and annamalai

தமிழக அரசியலில் மீண்டும் பெரியார் காலத்து ட்ரெண்ட் மீண்டு வருவதாக பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர், இந்து கடவுள்கள், இந்துக்களின் நம்பிக்கையை கொச்சை படுத்தும் விதமாக ஒரு சிலர் தொடர்ந்து செய்துவரும் சூழலில் திமுக ஆட்சியில் அது அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.


இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்  அது பின்வருமாறு : தில்லை காளியுடன் நடக்கும் போட்டியில், பரமசிவன் ஆனந்த தாண்டவம் ஆடுவார். அதை, கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த ஒருவர், கொச்சையாக விமர்சித்து, வீடியோ வெளியிட்டுள்ளார். தி.க.,வை சேர்ந்தவர்கள், இதன் பின்னணியில் செயல்படுவதும், அதற்கு தி.மு.க.,வினர் ஆதரவாக இருப்பதும் தெரிய வந்து உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், இந்த பிரச்னை தலைதுாக்கத் தான் செய்யும்.

முதல்வர் ஸ்டாலின், நேர்மையான உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததை பார்த்தால், கறுப்பர் கூட்டம் நடவடிக்கைகளுக்கு, அவரும் உடந்தை என்பதாக தான் எடுத்து கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின், கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றட்டும்; யாரும் கேட்க போவதில்லை.

அதற்காக, மத நம்பிக்கைகளை யாராவது கொச்சைப்படுத்தினால், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பான பதவியில் இருப்பதை, அவர் உணர வேண்டும். மறைமுக ஆதரவுசட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய முதல்வர் ஸ்டாலினே, மத மோதலுக்கு வித்திடும் கறுப்பர் கூட்டம் போன்ற வர்களுக்கு, மறைமுக ஆதரவு கொடுப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அவர்களை ஆதரித்த நிலை வேறு, இன்றைய நிலை வேறு என்பதை கூட ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை.

ஸ்டாலினுக்கு யார் நண்பர்கள், இணக்கமான கூட்டாளிகள் என்று பார்த்தால் தெளிவாக புரியும். 'தி.க., தலைவர்வீரமணியும், வைகோவும், தங்கள் உடம்பை நன்கு கவனித்து கொள்ள வேண்டும். அவர்கள், தங்களுக்காக இல்லாவிட்டாலும், இந்த நாட்டுக்காக நீண்ட காலம் வாழ வேண்டும்' என்று கூறுகிறார் ஸ்டாலின். நாட்டில் பிரிவினையை துாண்டி விடுபவர்கள் தான், அவருக்கு நண்பர்கள்.

அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது அவரது ஆவல், பிரார்த்தனை. அவர்கள் நீண்ட காலம் வாழட்டும்; அதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. நாமும் சேர்ந்து வாழ்த்தலாம். ஆனால், இன்று வரை அவர்களின் செயல்பாடு முழுதும், நாட்டு நலனுக்கு எதிராகவே உள்ளது. அப்படிப்பட்டவர்கள்நீண்ட காலம் வாழ வேண்டும் என முதல்வர் விரும்பினால், நாடு நாசமாகட்டும் என்பது தானே அர்த்தம்?பின்புலங்களை பாருங்கள்அதேபோல கவர்னரை எதிர்ப்போர் பின்புலங்களை பாருங்கள்.

அவர்கள் அனைவருமே, நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளும், சிந்தனைகளும் கொண்டவர்கள் தான்.இவர்களுக்கு ஆதரவு தருவதன் வாயிலாக, நடுநிலையாக செயல்படும் முதல்வர் என்ற தகுதியை, ஸ்டாலின் இழந்து விட்டார். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டது; இனி நம்மை கேள்வி கேட்பார் யாரும் இல்லை' என்று நினைத்து, கறுப்பர் கூட்டம், மீண்டும் ஹிந்து கடவுள்களை கொச்சைப்படுத்த துவங்கி உள்ளது.

இனியும் காலம் தாழ்த்தாமல், அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நடவடிக்கை எடுக்க வைப்போம். ஆட்சி அதிகாரம் தி.மு.க., கையில் இருக்கலாம். ஆனால், அதை கண்காணிக்கும் இடத்தில் பா.ஜக., உள்ளது என்பதை, தி.மு.க., மறந்து விடக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.