24 special

தாகத்தை உடனே குறைப்பது "குளிர்ந்த" நீரா? வெந்நீரா? இதோ வியக்கவைக்கும் உண்மை?

cold water Vs hot water
cold water Vs hot water

பதிவு - கே ஜி ஜவர்லால் / சேகரித்தவர் - வினோபா. ‘அறிவிருக்கா? தாகமா இருக்குன்னு சொல்றேன் சுடுதண்ணியைக் கொண்டுவந்து குடுக்குறியே?’ என்று எரிந்து விழுந்து கொண்டிருந்தார் நண்பர் மனையிடம்.தாகமாக இருக்கும்போது குளிர்ந்த நீர் குடித்தால்தான் தாகம் அடங்கும் என்கிற உணர்வு நம்மில் பலருக்கும் இருக்கிறது. இது நிஜமா அல்லது அப்செஷனா?


லிஃப்ட்டுக்கு பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருக்கும்போது லேட் ஆனால் இன்னும் இரண்டு, மூன்று தரம் அழுத்துவோம், ரிமோட்டில் செல் வீக்காகி விட்டால் பொத்தான்களை நன்றாக அழுத்துவோம். சுத்தமாகப் பிரயோஜனம் இல்லாத இந்த வேலைகளை எல்லாருமே செய்வோம்.அது மாதிரித்தானா இந்த குளிர்ந்த நீர் வெந்நீர் சமாச்சாரம்?இதற்கு பதில் ஆமாம், இல்லை இரண்டும்.

தாகம் என்பது உடலின் dehydrated நிலை. அந்நிலையில் உடம்பின் சூடு அதிகமாகி வாயுக்கள் நிறைய உருவாகி இருக்கும். குளிர்ச்சியான தண்ணீர் குடித்ததும் வாயுக்கள் குளிர்ந்து கொஞ்சம் condense ம் ஆகும். அப்படி ஆகும்போது ஒரு ரிலீஃப் கிடைத்த உணர்வு வருவது நிஜம்தான்.ஆனால் உடம்பின் dehydration ஐக் குளிர்ந்த நீரைவிட, வெந்நீர் சீக்கிரம் சரி செய்கிறது. ஏனென்றால் வெந்நீர் விரைவாக சிஸ்டத்தில் கலக்கிறது.

KG. JAWARLAL

வெயில் காலத்தில் அவ்வப்போது கொஞ்சம் மிதமான சூட்டில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். வெப்பத்தால் வரும் அயர்ச்சி தெரியாது. உடம்பில் தண்ணீர்ச் சத்து குறைந்தால் உபரி கார்பன் டை ஆக்ஸைடு நீக்கப் படுதல், வியர்வையின் மூலம் உடம்பைக் குளிர வைத்தல் இவை சரிவர நடக்காது. இரத்தத்தின் விஸ்காஸிட்டி அதிகமாகி ரத்த ஓட்டம் இடற்படும்.

சாப்பாடு இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து, குறைந்தது மூன்று வாரங்களுக்கு உயிரோடு இருக்கலாம். தண்ணீரும் விட்டமின், புரோட்டின் சப்ஸ்ட்டிட்யூட்டுகள் மட்டும் சாப்பிட்டு ஒருவர் 382 நாட்களுக்கு ஆரோக்யமாய் இருந்தாராம். ஆனால் 37 நாட்களுக்கு ஒரு தரம்தான் டூ பாத்ரூம் வந்ததாம் அவருக்கு!

இந்த கட்டுரை/பதிவு தனி நபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததை TNNEWS24 குழு இணையதளம் மூலம் பொது பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவுகிறது, இந்த கட்டுரை TNNEWS24 குழுவால் உருவாக்கப்பட்டதல்ல . உங்களது சிறப்பு கட்டுரைகள் /பதிவுகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.. EMAIL - [email protected] *T@C APPLY