Tamilnadu

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மாற்ற படுகிறாரா? பெண் போலீசார் மீதும் தாக்குதல்?

Municipal election
Municipal election

தமிழகத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்த நகராட்சி தேர்தல் அமைதியாக முடிந்தது என டிஜிபி கூறிய நிலையில் பெண் போலீசார் மீது மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் அத்துமீறி செல் போனை பறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.


தமிழகத்தில்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

பல இடங்களில் ஆளும் கட்சி அதிகார துஸ்பரயோகம் செய்வதாக புகார் எழுந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கண்டனங்கள் எழுந்தன, இந்த சூழலில் தேர்தல் நடைபெற்ற பூத் ஒன்றில் திமுகவினர் அங்கு காவலுக்கு நின்ற காவல் அதிகாரியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அத்துமீறி உள்ளே புகுந்து கள்ள ஓட்டு போட வாக்கு சாவடிக்குள் நுழையும் வீடியோ வைரலானது.

இந்த சூழலில் தற்போது  காவலர்களை குண்டர்கள் மிரட்டும் வீடியோவும் அதை தொடர்ந்து வீடியோ எடுத்த பெண் காவலர் ஒருவரின் செல்போனை பறித்து போ இதுக்கும் கேஸ் போடு என மிரட்டும் காட்சிகள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் என சட்டம் ஒழுங்கு குறித்து கவலை கொண்டே பல வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இத்தனை இடங்களில் கலவரம் நடைபெற்று இருக்கும் சூழலில் அமைதியாக முடிந்தது என எதன் அடிப்படையில் அறிக்கை கொடுத்தார் டிஜிபி என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன சமீப காலத்தில் இதுபோன்ற மோசமான தேர்தலையும் வாக்கு பதிவையும் பார்த்தது இல்லை என பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் சட்டம் ஒழுங்கு டிஜிபி மாற்றப்பட வாய்ப்பே இல்லை எனவும் அவரது செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் சில சர்ச்சைகளை உண்டாகினாலும் ஆளும் கட்சி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம்.