24 special

இந்தியாவின் S-400 ஏவுகணை..! பென்டகன் பரபரப்பு அறிக்கை..!

Joe Biden and modi
Joe Biden and modi

அமெரிக்கா : இந்திய ராணுவத்தின் பலத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வரும் ஆயுதங்களின் மேம்பாட்டையும் மட்டுமல்லாமல் இந்திய அரசு மற்ற நாடுகளிடமிருந்து வாங்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட விஷயங்களை உலகம் உற்றுக்கவனித்து வருகிறது. அதிலும் அமெரிக்கா ஒருபடிமேலே போய் உளவு வேலை பார்த்து வருகிறது.


இந்நிலையில் பென்டகனில் உள்ள பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின்  இயக்குனர் லெப்டினென்ட் ஜெனரல் ஸ்காட் பெர்ரியர்செனட் ஆயுதசேவைக்குழு உறுப்பினர்களிடம் கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வான்,தரை மற்றும் கடற்படை மற்றும் மூலோபாய அணுசக்தி படைகளை உள்ளடக்கிய விரிவுபடுத்தப்பட்டு ராணுவ நவீன மயமாக்கல் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.

அண்டைநாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முழுக்க முழுக்க ரஷ்யாவிலேயே தயாரான S-400 ரக ஏவுகணைகளை ஜூன் மாத இறுதிக்குள் எல்லைப்பகுதியில் நிறுத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2021 அக்டோபர் நிலவரப்படி இந்திய ராணுவம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை வலுப்படுத்த தொடங்கியுள்ளது. 

தாக்குதல் மற்றும் தற்காப்பு திறன்களை அதிகரிக்க மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை வாங்க முயன்றுள்ளது.மேலும் அவர் கூறுகையில் இந்தியா தனது உள்நாட்டு சொந்த தயாரிப்பான ஹைப்பர் சோனிக்,பாலிஸ்டிக், க்ரூஸ் மற்றும் வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை திறன்களை 2021ல் வெற்றிகரமாக சோதித்து இன்னும் மேம்படுத்தி வருகிறது. 

2019முதல் பிரதமர் மோடி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை வலுவாக்க முன்னுரிமை கொடுத்துள்ளார். இந்தியா முன்பு அமெரிக்கா ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ரஷ்யாவுடன் தனது நீண்டகால நட்பை வலுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. 

கடந்த டிசம்பரில் ரஷ்யா இந்தியாவுடனான "2 2" என்ற அடிப்படை பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் கூட இந்தியா நடுநிலைகொள்கையை கடைபிடிக்கிறது"  என ஜெனெரல் பெர்ரியர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.