24 special

எச்சரிக்கும் இந்தியா..! டிராகனிடம் சிக்கும் நேபாளம்..?

Modi,  kp sharma oli, xi jinping
Modi, kp sharma oli, xi jinping

இந்தியா : சீனா நிதியுதவி செய்வதாக கூறி உள்ளே நுழைந்த எந்த நாடும் வீழ்ச்சியடையாமல் தப்பித்ததே இல்லை. அதற்க்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீலங்கா. அந்த நாட்டிற்கு தேவையான கடன்களை வழங்குவதாக கூறி நிதிநிலைமையை மேலும் மோசமாக்கி ஸ்ரீலங்கா பொருளாதார வீழ்ச்சியடைந்தது. அதுபோல தற்போது நேபாளத்தை சீனா குறிவைத்துள்ளது.


நேபாள நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சீனா பல பில்லியன் டாலர்களை வாரி இறைத்து வருகிறது. அது ஒருபுறம் இருக்க தனது நோக்கமான அடுத்தவர் இடத்தை ஆக்கிரமிப்பது என்ற கொள்கையிலும் பிடிப்புடன் இருந்து நேபாளத்திற்கு சொந்தமான சில நிலப்பரப்புகளை தனக்கு சொந்தமாக்கி வருவதுடன் அதற்கென ஒரு மேப்பை தயார் செய்துவருகிறது.

நேபாள நாட்டில் உள்ள கூர்க்கா மாவட்டத்தின் சுமனுப்ரி கிராமம் 1 இல் இருந்தும் ரூய்லா எல்லைப்பகுதியில் இருந்தும் சில நிலப்பரப்புக்களை சீனா அபகரித்துக்கொண்டுள்ளது. மேலும் தான் ஆக்கிரமித்த இடங்களில் 200 மீட்டர் வேலிகள் அமைத்தும் வாயில்கள் அமைத்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. கிடைத்த உள்ளூர் செய்திகளின் அடிப்படையில்,

கடந்த ஜூன் மாதம் வரை எந்த ஒரு ஆக்கிரமிப்போ அல்லது வேலிகளோ அமைக்கப்படவில்லை. தற்போது சீன ஆக்கிரமிப்பில் உள்ள எல்லைப்பகுதியில் பொதுமக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் கடந்து சென்று வந்ததுடன் கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல இந்த பகுதியையே பயன்படுத்தி வந்துள்ளனர். 

ஆனால் தற்போது சீன நிர்வாகம் தடைவிதிப்பதாக தெரிகிறது. உலகமே கொரோனோவில் சீரழிந்து சின்னாபின்னமாகி நிற்கும்போதும்  ஜூன் 2020ல் ஹம்லா,ரஸுவா, சிந்துபால்சோக்,சங்குவாசபா ஆகிய மாவட்டங்களில் தோராயமாக 30 ஏக்கர்களுக்கும் மேலாக நேபாளநாட்டின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. இதனால் சுமார் 190 குடும்பங்கள் சீனப்பிரதேசத்தின் குடிமக்களாக மாறிய அவலமும் நடந்தேறியது.

இதுகுறித்து சர்வதேச வல்லுநர்கள் கூறுகையில் சீனாவின் கடன் வலையில் நேபாளம் விழக்கூடாது. முதலில் குறைந்த வட்டியில் நிதியை அளிக்கிறது. பின்னர் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தன்வசப்படுத்திக்கொள்கிறது. ஸ்ரீலங்காவுக்கு ஏற்பட்ட நிலை நேபாளத்திற்கு வரக்கூடாது என கருதினால் சீனாவிடமிருந்து நேபாளம் ஒதுங்கவேண்டும் என எச்சரிக்கின்றனர். மேலும் இந்திய தரப்பும் நேபாள அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.