24 special

துணை ஜனாதிபதி தேர்தலிலுமா...? சோகத்தில் எதிர்கட்சிகள்..!??

Amitsha, jp naada, modi
Amitsha, jp naada, modi

புதுதில்லி : துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு அவர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 அன்று முடிவடைவதையொட்டி ஆகஸ்ட் 6 அன்று துணைஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த துணை ஜனாதிபதி தேர்தலிலும் பிஜேபிக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


துணைத்தேர்தலுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 775 ஆக உள்ளது. இந்த தேர்தலில் லோக்சபா மாட்ரிம் ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் நியமன எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். மக்களவை எம்பிக்கள் 543 பேரும் ராஜ்யசபா எம்பிக்கள் 232பேரும் மொத்தமாக 775 பேர் வாக்களிக்க உள்ளனர். பிஜேபியின் பலம் கடந்த ஜூலை 1 அன்று 92 ஆக குறைந்துள்ளது.

ஆனால் அமோக வெற்றியுடன் கீழ்சபையில் பிஜேபி இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. துணைஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி இலக்கு 388 ஆக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் பிஜேபி 395 எம்பிக்களின் வாக்குகளை தன்வசம் வைத்துள்ளது.

இது வெற்றி இலக்கின் எண்ணிக்கையை விட ஏழு அதிகமாகும். பிஜேபி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுபவர் உறுதியாக வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றிபெறும் புதிய துணை ஜனாதிபதி வரவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மேலவைக்கு தலைமை தாங்குவார் என தெரிகிறது.

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை விட ஒரு சதவிகிதம் பின்தங்கியே உள்ளது. இதில் பிஜேபி மட்டுமே 42 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் பிஜு ஜனதாதளம் 3 சதவிகித வாக்குகள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் நான்கு சதவிகிதம் மற்றும் அகாலிதளம் 0.16 சதவிகித வாக்குகள் என கூட்டணிக்கட்சிகள் பிஜேபி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அவரின் வெற்றியும் உறுதியாகியுள்ளது.